(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!


 மதுரை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

21 Jul 2024 17:57 IST


மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


வழக்குப் பணியாளர்



காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி : Bachelor's Degree in Social Work படித்திருக்க வேண்டும். அல்லது Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 18,000


பல்நோக்கு பணியாளர்



காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 10,000


பாதுகாவலர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 2


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 12,000


தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 


முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 625020


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations