(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் 2024 இன்று தொடக்கம்: தயார் நிலையில் 1.99 லட்சம் மாணவர்கள்

இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1.99 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

22 Jul 2024 09:26 IST


இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் கலந்தாய்வு பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு செப்டம்பர் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுகளில் (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) ஆகியோருக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 



விளையாட்டு பிரிவில் 38, முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 664 இடங்கள் உள்ளன. இந்த 3 பிரிவு இடங்களுக்கும் சேர்த்து இந்தாண்டு 404 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. 


அதன்படி, இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.


சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு முடிந்த பின்  தொடர்ந்து பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளிகளில் 7.5% இடஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கான பொது கவுன்சிலிங் (ஆன்லைன்) மூலம் ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற உள்ளது.





இதைத் தொடர்ந்து, துணை கவுன்சிலிங் செப்டம்பர் 6-8 வரை நடைபெறும். பின்னர், சிறப்பு மத்திய உதவிக்கான (எஸ்.சி.ஏ) பிரிவில் பட்டியலின வகுப்பினருக்கான (எஸ்.சி) கவுன்சிலிங் கடைசி கட்டமாக செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


 

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations