(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

வெறும் ரூ.250 முதல் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செய்யலாம்.. செபி தலைவர் சொன்ன பலே தகவல்..!


 இந்தியாவில் விரைவில் அனைவரும் 250 ரூபாயிலிருந்தே எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP - Systematic Investment Plan) முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும் என செபி தலைவரான மாதபி பூரி பஜ் தெரிவித்துள்ளார். எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது 10 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.


இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் செபியின் தலைவரான மாதபி பூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெரும்பாலான பரஸ்பர நிதி திட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உருவாகப் போகின்றன என தெரிவித்தார். அதாவது 250 ரூபாயில் இருந்தே மாதாந்திர எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது கொண்டுவரப்படும், அப்போது அனைத்து தரப்பினரும் இதில் முதலீடு செய்வதற்கு முன் வருவார்கள் இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டு துறை பெருமளவில் வளர்ச்சி அடையும் என்றார்.




அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டு துறை பல மடங்கு வளர்ச்சியடைய போகிறது என தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே பரவலாக அதிகரித்துள்ளது பலரும் தங்களுடைய சேமிப்புகளை மியூச்சுவல் ஃபண்டுகளை நோக்கி திருப்பி விடுகின்றனர்.


இருந்தாலும் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ஒரு மாதத்திற்கு 1,000 ரூபாய் என உள்ளது, குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மட்டுமே 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம் என்ற வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.



வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பமானது பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளின் ஆரம்ப முதலீட்டு தொகையை மாதத்திற்கு ₹250 என்ற அளவிற்கு குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது வந்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் மியூச்சுவல் ஃபண்டு மேலாண்மைக்கான செலவினங்களை பெருமளவில் குறைத்துள்ளது.



இது மேலும் குறையும் அப்போது, குறைந்த வருமானம் கொண்டவர்களும் தங்களிடம் இருக்கக்கூடிய தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் வருவார்கள். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டு துறை வளர்வதோடு மட்டுமில்லாமல் சிறு வருமானம் கொண்ட முதலீட்டாளர்களும் ஒரு கணிசமான தொகையை லாபமாக பெற முடியும் என தெரிவித்துள்ளார்.



ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் எஸ்ஐபி வாயிலாக மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் 21,262 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டில் 3,000 கோடியாக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

v

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations