(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ரூ.5 லட்சம் டெபாசிட், ரூ.10 லட்சம் ரிட்டன்: முதலீட்டை இரட்டிப்பாக்கும் திட்டம்

 

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்; இந்த டெபாசிட் திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். முதிர்ச்சியின்போது முதலீடு ரூ.2 ஆயிரமாக இரட்டிப்பு உயர்வை தரும்.

18 Jul 2024 15:48 IST


Post Office Time Scheme : பொதுத்துறை, தனியார் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இருப்பது போல் அஞ்சலகங்களிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் உள்ளன.


இந்தத் திட்டங்கள் அஞ்சலங்களில் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் என கிடைக்கின்றன. மேலும், தபால் அலுவலகம் 5 வருட வரி இல்லாத FDக்கு நல்ல வட்டி தருகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், சில வருடங்களில் அது இரட்டிப்பாகும். போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியின் வட்டி விகிதங்கள் என்ன என்பதையும், அதன் மூலம் எவ்வளவு தொகையை இரட்டிப்பாக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.



டைம் டெபாசிட் வட்டி விகிதம்

ஒரு வருட கணக்கில் - 6.9% வருடாந்திர வட்டி


இரண்டு வருட கணக்கில் - 7.0% ஆண்டு வட்டி


மூன்று வருட கணக்கில் - 7.1% ஆண்டு வட்டி


ஐந்தாண்டு கணக்கில் - 7.5% ஆண்டு வட்டி


முதலீட்டை இரட்டிப்பாக்குவது எப்படி?

இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் முதலில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதன்பின்னர் அந்த முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.



நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு அஞ்சலக ஃபிக்ஸட் டெபாசிட்டில் 5 லட்சத்தை டெபாசிட் செய்யும் போது, போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் கால்குலேட்டரின் படி, 7.5 சதவீத வட்டி விகிதத்தில், உங்களுக்கு வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும்.


ரூ.10 லட்சம் ரிட்டன்

அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகை 7,24,974 ஆகக் கிடைக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் தொகையை மீண்டும் நிர்ணயிக்கும் போது, 7.5 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக ரூ.3,26,201 கிடைக்கும். ரூ.7,24,974 + ரூ.3,26,201 சேர்த்தால் மொத்தம் ரூ.10,51,175 கிடைக்கும். இந்த வழியில், நீங்கள் முதிர்வு காலத்தில் ரூ.10,51,175 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations