Advertisement

Responsive Advertisement

ரூ.1000 முதல் முதலீடு, 7.5 சதவீதம் வட்டி; ரூ.5 லட்சம் டெபாசிட், ரூ.10 லட்சம் ரிட்டன்!


 போஸ்ட் ஆபிஸின் இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். முதலீடுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.

10 Jul 2024 10:41 IST புதுப்பிக்கப்பட்டது 10 Jul 2024 10:41 IST

author-image

கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு | நீண்ட கால முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெற விரும்பினால், போஸ்ட் ஆபிஸின் பல்வேறு திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.



இதில், கிசான் விகாஸ் பத்ராவும் ஒன்று. நீண்ட கால நிதிச் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 1988 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது.


ஆரம்பத்தில் இந்த திட்டம் விவசாயிகளுக்காக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது எந்த இந்திய குடிமகனும் இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.



கிஷான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்கள் முதலீட்டை 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாக்க உத்தரவாதம் அளிக்கிறது.


இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களுக்குப் பிறகு, அது முதிர்ச்சியாகி உங்களுக்கு ரூ.10 லட்சத்தை வருமானமாக திருப்பி அளிக்கும்.



எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம்

கேவிபியில் முதலீடு வெறும் 1000 ரூபாயில் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. ஆனால் அதில் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், நீங்கள் பான் கார்டை வழங்குவது கட்டாயம். அதாவது, பணமோசடி ஏற்படுவதைத் தடுக்க, கிசான் விகாஸ் பத்ராவில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய 2014-ம் ஆண்டு பான் கார்டை அரசு கட்டாயமாக்கியுள்ளது.


மறுபுறம், ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் வருமான வரித் தாக்கல், வங்கிக் கணக்கு விவரங்களை சமர்பிக்க வேண்டியது இருக்கும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations