Advertisement

Responsive Advertisement

7 வருடத்தில் 16.45 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு.. மோடி அரசின் 3 முக்கிய செயல்கள் தான் காரணம்..!


 சென்னை: இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் முறைசாரா துறை அதாவது informal sector-ல் சுமார் 16.45 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASUSE) அறிக்கை தெரிவிக்கிறது.


2015-16ம் ஆண்டில் நாட்டின் முறைசாரா துறைகளில் பணியாற்றியோர் எண்ணிக்கை 11.13 கோடியாக இருந்த நிலையில், 2022-23ம் ஆண்டில் 10.96 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.



jobs  demonetisation  GST  covid 19

2015-16ம் ஆண்டு முதல் முறைசாரா துறையின் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளைக் கண்காணித்து வருகிறது. இந்த தரவுகளைத் திரட்ட முக்கிய காரணமாக அமைந்தது 3 விஷயங்கள்.


2016ம் ஆண்டு நவம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு ஜூலையில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி, 2020ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய கொரோனா தொற்று உள்ளிட்ட காரணிகளால் முறைசாரா துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதன் காரணமாகவே வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதைத் தான் இந்த புள்ளி விவரங்கள் நமக்குக் கூறுகிறது.



இந்த காலகட்டத்தில் முறைசாரா துறையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6.33 கோடியிலிருந்து 6.50 கோடியாக அதிகரித்துள்ளது, ஆனாலும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 16.45 லட்சம் குறைந்து 11.13 கோடி வேலைவாய்ப்புகளிலிருந்து 10.96 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.


முறைசாரா துறையில் பணியாற்றும் 75 சதவீத பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


jobs  demonetisation  GST  covid 19

ஆனால், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் மொத்த தொழிலாளர்களில் 42 சதவீதம் பேர் உள்ளனர்.



நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) முறைசாரா துறைகளின் பங்கு 44 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்றும் 75 சதவீத தொழிலாளர்கள் இந்த துறைகளிலேயே பணிபுரிகின்றனர்.


மத்திய புள்ளி விவரத் துறை அமைச்சகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டுள்ள முறைசாரா துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations