Advertisement

Responsive Advertisement

தேசிய சேமிப்பு சான்றிதழ்

 https://d28wu8o6itv89t.cloudfront.net/images/NSCpng-1538657378677.png

தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், (National Savings Certificatesஎன்.எஸ்.சி எனப் பிரபலமாக அறியப்படுவது இந்திய அரசாங்க சேமிப்பு பத்திரமாகும். இது முதன்மையாக இந்தியாவில் சிறிய சேமிப்பு மற்றும் வருமான வரி சேமிப்பு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியா அஞ்சல் துறையின் அஞ்சல் சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் வயது வந்தவர் (அவரது/அவள் சொந்த பெயரில் அல்லது ஒரு சிறார் சார்பாக), சிறார், அறக்கட்டளை, அல்லது இரண்டு பெரியவர்கள் கூட்டாக முதலீடு செய்யலாம். இவை ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வு காலத்திற்கு வழங்கப்படுகின்றன. மேலும் கடன்களைப் பெறுவதற்கு பிணையமாக வங்கிகளுக்கு உறுதியளிக்க வழங்கலாம். வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 80சிஇன் வரிச் சலுகையும் பெறலாம்.[1] [2] [3]


இந்தியாவில் இது போன்ற பிற அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் பின்வருமாறு: பொது சேமநல வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தபால் அலுவலகம் நிலையான வைப்புத்தொகை, தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை.[4] இந்தச் சான்றிதழ்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு 1950களில் தேசத்தைக் கட்டியெழுப்ப நிதி திரட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனமின்னணு சான்றிதழ்


ஏப்ரல் 1 2016 முதல் அச்சிடப்பட்ட சான்றிதழ் நிறுத்தப்பட்டு, மின்னணு பயன்முறை (மின் முறை) 'தேசிய சேமிப்பு சான்றிதழ்' வழங்கப்படுகிறது. சிபிஎஸ் அமைப்பு இந்த மின்-பயன்முறைக்கு முழுவதும் மாறும் வரை, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அச்சிடப்பட்ட சான்றிதழை வழங்கலாம்.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations