(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. இது ரொம்ப முக்கியமான டெட்லைன்.. போச்சுன்னா ஜோலி முடிஞ்சுச்சு!


 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்காக வருமான வரி செலுத்துவோர் தயாராக வேண்டும். வருமான வரித் துறை விதிமுறைகளின் அடிப்படையில் முக்கியமான காலக்கெடு, அபராதங்கள் மற்றும் பிற விஷயங்களை வரி செலுத்துவோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் வரி செலுத்துவோர் எந்தவித அபராதமும் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.


ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மற்றும் அபராதங்கள்: 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கான தனிநபர்களின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். இந்தக் காலக்கெடுவை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்.




ET Wealth-இன் தகவல்படி, இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு ITR தாக்கல் செய்யப்பட்டால், தாமதமாக தாக்கல் செய்வதற்கான அபராதமாக ரூ.5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10,000-ஐ விட அதிகமான வரி பாக்கி உள்ள வரி செலுத்துவோருக்கு, நிலுவையில் இருக்கும் வரித் தொகையின் மீது மாதத்திற்கு 1 சதவீத கூடுதல் வட்டி விதிக்கப்படலாம்.


TDS தொடர்பான அபராதங்கள்: வரி செலுத்துவதில், TDS முக்கிய பங்கு வகிக்கிறது. ரூ.50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்கும் போது TDS கழிக்கப்படவில்லை என்றாலோ அல்லது TDS கழிக்கப்பட்டு அரசிடம் செலுத்தப்படவில்லை என்றாலோ, அபராதமாக மாதத்திற்கு 1% முதல் 1.5% வரை விதிக்கப்படலாம்.



வரி மீறல்கள் மற்றும் அதன் விளைவுகள்: பல்வேறு விதி மீறல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, தவறான பான் கார்டை வழங்கினால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வரி ஏய்ப்பு அபராதமாக, அந்தத் தொகையில் 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை விதிக்கப்படலாம். அதாவது வரி ஏய்ப்பு செய்த மொத்தத் தொகையும் அபராதமாக விதிக்கப்படலாம். இன்னும் சில குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையும் சேர்த்து விதிக்கப்படலாம்.


தாமதமாக ITR தாக்கல் செய்வதன் தாக்கங்கள்: தாமதமாக தாக்கல் செய்வது அபராதம் மட்டுமின்றி, வரி செலுத்துபவர்களுக்கு வரி விலக்கு கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பளிக்கிறது. எடுத்துக்காட்டாக, அசல் காலக்கெடுவிற்குப் பிறகு ITR தாக்கல் செய்யப்பட்டால், பிரிவுகள் 10A, 10B, 80-IA, 80-IB, 80-IC, 80-ID மற்றும் 80-IE ஆகியவற்றின் கீழ் வரி விலக்குகள் கிடைக்காமல் போகலாம். வரிச் சலுகைகளை அதிகரிக்கவும், தேவையற்ற நிதிச் சுமைகளைத் தவிர்க்கவும் சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம்.


சட்ட நடவடிக்கைகள்: தொடக்க காலக்கெடுவைத் தவறவிட்ட வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரித் துறை டிசம்பர் 31, 2024 வரை தாமதமாக ITR தாக்கல் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், தாமதமாக ITR தாக்கல் செய்தால், வரி செலுத்துவோரைப் பொறுத்து ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.



எனவே சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்வது நிதி இழப்பை குறைக்கவும் மற்றும் வரி விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குகிறீர்கள் என்பதையும் எடுத்துக்காட்டும். இது அரசுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் நல்லது தானே!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations