(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்தி

 

 இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்தி Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar|Updated: Jul 09, 2024, 02:08 PM IST

அடல் பென்ஷன் யோஜனா: இது எப்போது தொடங்கப்பட்டது?

இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?

தற்போது கிடைக்கு ஓய்வூதியம் எவ்வளவு?

Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், பல தரப்பு மக்களிடையே பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்வார். நடுத்தர வர்க்கத்தினர், சம்பள வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள், தொழிதுறையினர் என அனைவருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 



இந்த பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


அடல் ஓய்வூதியத் திட்டம்


அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 66.2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் எற்படும் நிதி தாக்கத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பான முன்மொழிவை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கும்போது இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். அரசு இந்த பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக முனைப்பு காட்டி வருகின்றது. அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு தொடர்பான தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதற்கான களத்தை தயார் செய்து வருகிறது. சமீபத்திய தரவுகளின் படி, ஜூன் 20 வரை APY இன் கீழ் இத்திட்டத்தில் மொத்தம் 66.2 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். 2023-24 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் 1.22 கோடி பேர் இதில் புதிதாக சேர்க்கப்பட்டனர். 



அடல் பென்ஷன் யோஜனாவின் தொகை அதிகரிக்க வாய்ப்பு


அடல் ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடல் பென்ஷன் யோஜனாவில் (Atal Pension Yojana) குறைந்தபட்ச கொடுப்பனவை அரசாங்கம் 10,000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


அடல் ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த தொடரும் முயற்சிகள்


அடல் பென்ஷன் திட்டம் ஒரு மிகச்சிறந்த ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் ஏராளமானோர் ஓய்வூதிய பலனை பெற்று வருகிறார்கள். தற்போது இதை இன்னும் மேம்படுத்த சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations