(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வருகிறது உத்தரவாதத்துடன்கூடிய ஓய்வூதியத் திட்டம்!


 அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதத்துடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது!


Published:11 Jul 2024 10 AM

Updated:11 Jul 2024 10 AM

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்களுக்கு உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் பணிஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.


2004-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவொரு பங்களிப்புத் திட்டம் ஆகும்.



NPS

NPS

பழைய ஓய்வூதியத் திட்டம்... என்ன தான் பிரச்னை?

அரசு ஊழியர், அரசு என இரு தரப்பில் இருந்தும் ஓய்வூதிய நிதிக்குப் பங்களிப்பு செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. மேலும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் பாதிப்பும் என்.பி.எஸ் நிதியில் இருப்பதாக அரசு ஊழியர்கள் கருதுகிறார்கள்.


ஆனால், நீண்ட கால அடிப்படையில் தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளது. ஆனாலும், இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதே அரசு ஊழியர்கள் தெரிவிக்கும் மிகப் பெரிய குறையாக உள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.


ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை என மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது.


எனினும், ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் எனச் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதால், இது ஓர் அரசியல் சிக்கலாக மாறிவிட்டது. தவிர, சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டும் உள்ளது.


எனவே, ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும்படி நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது.



பென்ஷன்

பென்ஷன்

இந்தக் குழு உலக நாடுகளில் உள்ள ஓய்வூதியத் திட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


இதை அடுத்து, அரசு ஊழியர்களுக்கு 40% முதல் 45% வரை ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கலாம் என நிதி அமைச்சகத்துக்கு சோமநாதன் குழு பரிந்துரை வழங்கலாம் எனப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும், இந்திய அரசிடம் தற்போது பென்ஷன் ஃபண்ட் எதுவும் இல்லாத நிலையில், புதிதாக பென்ஷன் ஃபண்ட் உருவாக்குவதற்கான அறிவிப்பையும் பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations