Advertisement

Responsive Advertisement

பஸ்-ல மீதி காசு வாங்க மறந்துட்டீங்களா? திருப்பி வாங்குவது எப்படின்னு தெரியுமா?


 நம்மில் பலர் பஸ்களில் அடிக்கடி பயணம் செய்கிறோம். சில சமயங்களில், அவசரம் அல்லது மறதி காரணமாக கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு மீதி காசு வாங்க மறந்துவிட்டு இறங்கிவிட நேரிடலாம். இதனால் பணத்தை இழந்துவிட்டோமோ என்ற கவலை ஏற்படலாம். ஆனால், கவலைப்பட வேண்டாம். சில எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். இந்தக் கட்டுரையில், பஸ்சில் இறங்கும்போது கண்டக்டரிடம் மீதி காசை வாங்க மறந்துவிட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.


சில நேரங்களில் பயணம் செய்யும்போது சில்லறை இல்லாத காரணத்தினால் 500 ரூபாயாக கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்து விட்டு, மீதி பணத்தை பேப்பரில் எழுதி உங்களிடம் கொடுத்து, இறங்கும்போது வாங்கிக் கொள்ள சொல்வார். ஆனால் கண்டக்டரும் மறந்து, நாமும் மறந்து இறங்கி விட்டோமானால், பணத்தை எப்படி பெறுவது? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும்.



Travel  Tamilnadu  bus


பயப்படத் தேவையில்லை! நீங்கள் பணத்தை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு முதலில் TNSTC-இன் டோல் ஃப்ரீ நம்பரான 1800 599 1500 என்ற நம்பருக்கு அழைப்பு விடுக்கலாம்.


உங்கள் டிக்கெட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் பஸ் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், எந்த இடத்தில் ஏறி, எந்த இடத்தில் இறங்கி இருக்கிறீர்கள்? என்ற விவரங்கள் மற்றும் சில விவரங்களை அவர்கள் கேட்ப்பதற்கிணங்க கொடுக்க வேண்டும்.



நீங்கள் கொடுத்த விவரங்களை வைத்து, நீங்கள் பயணித்த பஸ் கண்டக்டரிடம் கால் செய்து விவரங்களையும், உங்களின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்கள் சரி பார்ப்பார்கள். எல்லா தகவல்களும் சரியானது எனும் பட்சத்தில், உங்களுடைய பணத்தை G-pay மூலம் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.


அப்படி இல்லை என்றால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் பஸ் ரூட், பஸ் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் போன்ற விவரங்கள் இருக்கும். அதை வைத்து பஸ் டிப்போவுக்கு சென்று கண்டக்டர் அல்லது டிக்கெட் கவுண்டரை அணுகி நடந்த விஷயத்தை கூறி, உங்கள் டிக்கெட்டின் விவரங்களை கொடுக்க வேண்டும். அதன்பின் அவர்கள் அதனை சரி பார்த்து விட்டு பணத்தை திருப்பித் தருவார்கள்.



எனவே, அடுத்த முறை பஸ்சில் பயணம் செய்யும்போது கண்டக்டரிடம் சில்றை வாங்க மறந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்


More From GoodReturns

ஓமன், மஸ்கட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. இனி அடிக்கடி ஊருக்கு வரலாம்..!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations