Advertisement

Responsive Advertisement

இன்ஜினியர் மாணவர்களுக்கு குட்நியூஸ்..!


 அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த நவீன திறன்கள் கொண்ட 10 லட்சம் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டுபிடிப்புகளும் நமது அன்றாட பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவையும் அதிகரித்து வருகின்றன.



இந்தியாவில் தொழில்நுட்பத் துறை சார்ந்த வல்லுநர்கள் அதிகம் இருந்தாலும் நவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட பொறியாளர்கள் குறைவாக உள்ளனர்.

அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்ப பொறியாளர்களின் கணிசமாக அதிகரிக்கும் என இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



IT  jobs  AI

எனவே அரசு செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்பு மற்றும் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


பெங்களூருவில் செயல்படக்கூடிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவரான சங்கீதா குப்தா இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ,டேட்டா அனலிஸ்ட், சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் கட்டாயம் திறன்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


புதிதாக கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து வரும் நபர்கள் இந்த துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகளில் கால் பங்கினை மட்டுமே நிரப்ப முடியும். எனவே ஏற்கனவே இந்த துறை சார்ந்து இயங்குபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தளம் சார்ந்த செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகமாக மாற்றம் கண்டு வரும் நிலையில் நமது பணியாளர்கள் அதற்கு ஏற்ற வகையில் அடிக்கடி புதிய அப்டேட்டுகளுக்கு ஏற்ப பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





இல்லை என்றால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் இருக்கும் ஆனால் அதற்கு திறன் வாய்ந்த நபர்கள் கிடைப்பது சவாலாக இருக்கும் என கூறியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப துறை என்பது 250 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது.


இந்திய பொருளாதாரத்தில் இது மிக முக்கிய பங்காற்றுகிறது .கிட்டத்தட்ட 5.4 மில்லியன் மக்கள் இந்த துறைகளில் வேலை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப சேவைகளை பொருத்தவரைக்கும் நாட்டின் ஜிடிபியில் 7.5 சதவீத பங்கு வகிக்கிறது.



டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த மாதத்தில் மட்டும் திறமையான பணியாளர்கள் கிடைக்காததால் சுமார் 80,000 பணியிடங்கள் நிரப்பாமல் காலியாகவே வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில் டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளிப்பதையும் ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பாக்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல்&டி தங்கள் நிறுவனத்தின் ஐடி பிரிவில் 20,000 பொறியாளர்களுக்கான தேவை இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.



எனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது வேலை வாய்ப்புகள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற திறன் கொண்ட ஊழியர்கள் கிடைப்பது சவாலாக இருப்பதாக இவர் கூறுகிறார். இந்தியாவின் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே வருங்காலத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations