(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

 ரூ.1000 முதலீடு செய்தால் 3.2 லட்சம் கிடைக்கும்.. நீங்க இந்த 3 திட்டத்துல முதலீடு செஞ்சிருக்கீங்களா? | Post Office PPF Scheme: Invest Rs.1,000 Monthly to Earn Rs.3,25,457 – Calculation Explained

Updated: Mon, 2 Sep 2024, 11:47 AM



போஸ்ட் ஆபீஸ்களில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. வருமான வளர்ச்சிக்கு கண்டிப்பாக முதலீடு அவசியம். அதிக அளவில் வருமானத்தைப் பார்க்க அதிக அளவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று கிடையாது. ஏனெனில் 1000 ரூபாய் என்ற சிறிய தொகையில் தொடங்கினாலும் காலப்போக்கில் கணிசமான பலன்களைப் பெற முடியும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப தொடர்ந்து முதலீடு செய்தாலே போதுமானது. அதன் பிறகு உங்கள் பங்களிப்புகளை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம். இது போன்ற சிறிய முதலீடும் பிற்காலத்தில் உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும்.


Oneindia Native Promo

பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். PPF திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆண்டுக்கு ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் கூட்டு வட்டியின் நன்மையைப் பெறலாம். PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் ரூ.12,000 முதலீடு செய்வீர்கள். 15 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்தம் ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பீர்கள்.


Oneindia Native Promo

அப்படியானால் தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தின்படி, வட்டித் தொகை ரூ.1,45,457 ஆக இருக்கும். இந்த வழியில், PPF இன் 15 வருட லாக்-இன் காலம் முடிந்த பிறகு உங்களிடம் மொத்தம் ரூ.3,25,457 இருக்கும்.


ரெக்கரிங் டெபாசிட்: RD என்பது சிறிய முதலீட்டாளர்களிடையே பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் RD கணக்கைத் திறக்கலாம். முதலீட்டாளர்கள் வங்கியில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை RD முதலீடு செய்யலாம். மறுபுறம், RD அஞ்சல் அலுவலகத்தில் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உள்ளது.


RD திட்டம் PPF திட்டத்தை விட குறைவான வட்டியை வழங்குகிறது. வரியைப் பொறுத்தவரை, வங்கியில் வழங்கப்படும் RD திட்டத்தில் உங்கள் வட்டி 40,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், TDS கழிக்கப்படும். தற்போது, தபால் அலுவலகத்தில் 5.8 சதவீத வட்டி விகிதம் RD திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.


Oneindia Native Promo

இது வங்கிகளின் RD-யை விட சிறந்த வட்டி விகிதமாகும். ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 ரூபாய் போஸ்ட் ஆபீஸ் RD-இல் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.60,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு, 5.8 சதவீத வட்டியில் ரூ. 9694 வட்டி கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத் தொகையாக ரூ.69,694 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.


மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இது PPF மற்றும் RD போன்ற பாதுகாப்பான முதலீடாக இருக்காது. மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. ஆனால் அதில் சில ஆபத்துகளும் உள்ளன. SIP மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.


Oneindia Native Promo

நீங்கள் ரூ.1,000 ரூபாய் SIP திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தம் ரூ.60,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்தத் தொகைக்கு சராசரியாக 10 சதவீதம் வருமானம் கிடைத்தால், ரூ.78,082 ரூபாய் வருமானம் கிடைக்கும். நீங்கள் முதலீட்டு காலத்தை 15 ஆண்டுகளாக நீட்டித்தால், 1,80,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். அப்படியானால் முதிர்வுக் காலத்தில் 4,17,924 ரூபாய் கிடைக்கும்.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations