(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

டிகிரி முடித்தாலே போதும்.. Accenture ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி


 சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான அக்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் பணியாற்றலாம். அதன்படி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்ய முடியும்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆக்சென்ச்சர் (Accenture) ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.


தமிழகத்தில் தலைநகர் சென்னையிலும் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த விபரம் வெளியாகி வருகிறது. அதன் விபரம் வருமாறு: தற்போது க்சென்ச்சர் நிறுவனத்தில் Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு Microsoft SQL Server பற்றி நன்கு தெரிிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவு அனுபவம் என்று பார்த்தால் Terraform CDKTF with Azure using Python மற்றும் Mircrosoft Azure Devops Asure laClassS Development உள்ளிட்டவற்றில் நல்ல திறமை இருக்க வேண்டும். இதுதவிர நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.



பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணி என்பது டிசைன், பில்ட் மற்றும் கான்ஃபிஹர் அப்ளிகேஷன்ஸ் பணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பணிக்கான இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் பணியாற்றலாம். அதன்படி பார்த்தால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations