Advertisement

Responsive Advertisement

Mega Job Fair : 10,000 காலிப்பணியிடங்கள், 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் - நாமக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


TN Govt Mega Job Fair in Namakkal : தமிழக அரசு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


தனியார் நிறுவனங்களில் வேலை

அரசு துறைகளில் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 21.09.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாபெரும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

யாரெல்லாம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்?

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வேலைவாய்ப்பு முகாம் சிறப்பு அம்சங்கள் :

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளுகின்றனர். இந்த முகாம் மூலம் 10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும், இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்து தரப்படும்.

முகாம் நடைபெறும் இடம் :

நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும், முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், இராசிபுரம், நாமகிரிபேட்டை, திருச்செங்க்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல காலை 8 மணிக்கு கல்லூரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 04286-222260, 6380369124 என்ற தொலைப்பேசி எண்ணுக்கும், jobfairnkl20222@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம். மேலும், தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations