Advertisement

Responsive Advertisement

Southern Railway Recruitment 2024 : தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - விளையாட்டு வீரர்களுக்கு 67 காலிப்பணியிடங்கள்!

 


Southern Railway Recruitment 2024 (Sports Quota) : தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள 67 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓட்ட பந்தயம், செஸ், பழு தூக்குதல், கூடைபந்து, குத்து சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட பிரிவு வீரர்கள் (பெண்/ஆண்கள்) இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் பற்றி இந்த தெரிந்துகொள்ளுங்கள்.



பணியிடங்களின் விவரம் :


ரயில்வே பணியில் நிலை 1- 46 இடங்கள், நிலை 2 மற்றும் 3 - 16 இடங்கள் மற்றும் நிலை 4 மற்றும் 5 - 5 இடங்கள் என மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒட்டப்பந்தயம், கூடைப்பந்து, பூப்பந்து, பாடி பில்டிங், குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, பவர் லிஃப்டிங், நீச்சல், டேபிள் டென்னிஸ், வாட்டர் போலோ, கைப்பந்து, செஸ் ஆகிய விளையாட்டு பிரிவில் சர்வதேச, தேசிய, ஆசிய உள்ளிட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே பணிக்கான வயது வரம்பு :

விண்ணப்பதார்கள் 01.01.2025 ஆம் தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் 02.01.2000 மற்றும் 01.01.2007 ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.



சம்பள விவரம் :

தெற்கு ரயில்வேயின் இப்பணியிடங்களுக்கு நிலை 1 முதல் நிலை 5 வரை சம்பளம் வழங்கப்படும். நிலை 1 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18,000, நிலை 2 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.19,900, நிலை 3 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21,700, நிலை 4 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.25,500 மற்றும் நிலை 5 குறைந்தபட்சம் சம்பளமாக ரூ.29,200 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் நிலை 1 பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். நிலை 2 மற்றும் 3 பணிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், நிலை 2 மற்றும் 3 பணிகளுக்கு 10-ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நிலை 4 மற்றும் 5 பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விளையாட்டு பிரிவில் செய்த சாதனைகள், வெற்றி பெற்ற போட்டிகள் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். வீரர்களுக்கு திறன் தேர்வு நடைபெறும். மேலும், கல்வித்தகுதியும் கணக்கில் எடுத்துகொள்ளப்படும். விளையாட்டு சாதனைகளுக்கு 40 மதிப்பெண்கள், திறன் தேர்விற்கு 50 மதிப்பெண்கள் மற்றும் கல்வித்தகுதிக்கு 10 மதிப்பெண்கள் என்ற விதம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு இடங்களுக்கு https://iroams.com/ என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கவும். மேலும், கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பெண்கள் கட்டணம் கிடையாது.



முக்கிய நாட்கள் :

ரயில்வே பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் 07.09.2024 காலை 9 மணி முதல் தொடங்கியது. விண்ணப்பிக்க 06.10.2024 ஆம் தேதி இரவு வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations