Advertisement

Responsive Advertisement

TCS வேலைவாய்ப்பு.. பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்போருக்கு குட்நியூஸ்.. நாளை கடைசி நாள்

 


சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தற்போது கல்லூரியில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்து வருவோர் விண்ணப்பம் செய்யலாம். அதாவது 2025ம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிகிரி படிப்பை முடிப்பவர்கள் நாளைக்குள்(செப்டம்பர் 15) விண்ணப்பம் செய்யலாம்.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை, மதுரை உள்ளிட்ட பிற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ்ஸை பொறுத்தவரை தற்போது அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS BPS Hiring for 2025 year of passing graduates என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

 அதாவது தற்போது இறுதியாண்டு படித்து வருவோர் விண்ணப்பிக்கலாம். அதன்படி பிகாம், பிஏ, பிஎஎஃப், பிபிஐ, பிபிஏ, பிபிஎம், பிஎம்எஸ், பிஎஸ்சி (கணிதம், இயற்பியல், புள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளை தவிர) படித்து வருபவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

 விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை பணிக்கு சேருவதற்கு முன்போ அல்லது கல்லூரி படிப்பை முடிக்கும் முன்போ கிளியர் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Cognizant வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தாரர்கள் TCS NextStepPortal சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது ஆதார் கார்டில் இருப்பது போல் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். 

பிழையின்றி சுயவிபரங்களை பதிவிட வேண்டும். பிழை எதுவும் இருப்பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதனால் விண்ணப்பத்தாரர்கள் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 " தெற்கு ரயில்வேயில் வேலை.. 67 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. இதோ விவரம்!" அதன்பிறகு அக்டோபர் மாதம் 11ம் தேதி தேர்வு என்பது நடைபெற உள்ளது. தேர்வு மையத்தை விண்ணப்பம் செய்யும்போதே விண்ணப்பத்தாரர்கள் செலக்ட் செய்ய வேண்டும்.

தேர்வு மையத்தை பொறுத்தவரை First Come First Serve முறை பின்பற்றப்பட உள்ளது. இதனால் விண்ணப்பத்தாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் தான் அருகே உள்ள தேர்வு மையத்தை ‛செலக்ட்’ செய்யலாம். தேர்வு என்பது மொத்தம் 50 நிமிடங்கள் வரை இருக்கும். Numerical, Reasoning, Quantitative aptitude வகையில் இருக்கும்.

TCS வேவைாய்ப்பு.. சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி இண்டர்வியூ.. யாரெல்லாம் பங்கேற்கலாம்? அதோடு விண்ணப்பத்தாரர்கள் தங்களின் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் இதுவரை நடந்த செமஸ்டர் தேர்வுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

மேலும் இந்த பணி தொடர்பான அப்டேட்டுகள் ‛TCS iON - Our Test Provider’ மூலம் வழங்கப்படும். மேலும் பணம் எதுவும் அலுவலகத்தில் கேட்கப்படாது. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் tcsbps.support@tcs.com என்ற இணையதளம் அல்லது 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 24X7 என்ற முறையில் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations