(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

இந்தியாவில் ஏன் அரசு வேலை பெற இவ்வளவு போட்டி? | Why Indians are obsessed with govt jobs?




Updated: Sat, 7 Sep 2024, 8:16 AM


சென்னை: என்னதான் பெரிய கல்வி நிறுவனங்களில் சென்று உயர் படிப்பு படித்தாலும், தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் பணிபுரிந்தாலும் அரசு வேலையில் இருப்பது தனி கெத்தாக பார்க்கப்படுகிறது. பெற்றோரே கூட தங்களுடைய குழந்தைகளுக்கு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என கூறி தான் வளர்க்கிறார்கள்.


எனவே தான் மாநில அளவிலும் சரி மத்திய அளவிலும் சரி அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் போதெல்லாம் சொற்பமான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடுவதை நாம் காண முடிகிறது.



உதாரணமாக ஹரியானாவில் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 40,000 பட்டதாரிகள் இந்த பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். அதேபோல உத்திரபிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு சுமார் 60 ஆயிரம் பணியிடங்களுக்கு 50 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.



அரசு துறைகளில் ஒரு ஓட்டுநர் தொடங்கி உதவியாளர் வரை சாதாரண பணி ,குறைவான ஊதியம் என்றால் கூட அதற்கான போட்டி அதிகமாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கில் இருக்கும் வேலை வாய்ப்புகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடுகின்றனர்.


இதற்கு முக்கிய காரணம் அரசு வேலைகளில் கிடைக்க கூடிய பணி பாதுகாப்பு மற்றும் பிற பலன்களாகும். இந்தியாவை பொறுத்தவரை உயர் படிப்பினை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இவர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலையை பெற்று விட வேண்டும் என நினைக்கின்றனர் .


சர்வதேச பணியாளர் அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை மிக தீவிரமாக இருக்கிறது எனக�



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations