(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

புது விதிகள்.. மே 1 தேதி போச்சு.. உங்க PAN கார்டுல இதை செய்யலனா.. செயலிழப்புதான்.. உடனே ஆதார் எடுங்க!


 

2024-25ஆம் நிதியாண்டு தொடங்கியாச்சு, ஆகவே உங்களது பான் கார்டு (PAN Card) உடன் ஆதார் கார்டு (Aadhaar Card) இணைக்கப்பட்டதை நீங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். ஏனென்றால், மே 31ஆம் தேதிக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது புதிய அறிவிப்பு வெளியாகிவிட்டது.


இந்த நிதியாண்டில் என்னென்ன விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்று பெரிய பட்டியலே போடலாம். கிரெடிட் கார்டு முதல் பான் கார்டு வரையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. மே 1ஆம் தேதியில் இருந்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.


PAN Aadhaar Link Before June 30

ஆனால், பான் ஆதார் இணைப்பு (PAN Aadhaar Link) விதிகளே அதீத கவனம் பெற்றிருக்கிறது. ஏனென்றால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அந்த பான் கார்டு செயலிழப்பு செய்யப்படுகிறது. இதனால், டிடிஎஸ் (TDS) செலுத்துவது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.



இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. அதோடு மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (Central Board of Direct Taxes) இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மாா்ச் 31ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ், பான்-ஆதார் இணைப்பட்டிருந்தால் அதிகமாக்கப்படாது.


ஆகவே, பான்-ஆதார் இணைப்பை மே 31ஆம் தேதிக்குள் உறுதி செய்யுங்கள் தெரிவித்திருந்தது. இந்த காலக்கெடுவால், வரி செலுத்துவோர் அறக்க பறக்க பான்-ஆதார் இணைப்பில் மும்முரம் காட்டினர். ஆனால், அவர்களது வயிற்றில் பாலை வார்த்தது போல, இந்த காலக்கெடு ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஜூன் 30ஆம் தேதி வரையில் காத்திருக்காமல், ஆன்லைனில் எளிதாக பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைத்து கொள்ளுங்கள். ஏனென்றால், அது செயலிழப்பு செய்யப்படலாம். இது வரி செலுத்தும் மக்களுக்கு மட்டுமல்லாமல், பான் மற்றும் ஆதார் வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தக் கூடிதாகும். ஆகவே, கொஞ்சம் நேரத்தில் அதை முடித்து கொள்ளுங்கள்.


பான் - ஆதார் இணைப்பது எப்படி? வருமான வரி இ-ஃபில்லிங் (Income Tax E-Filing) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். ஓப்பன் செய்த பிறகு இடது புறத்தில் இருக்கும் மூன்றாவதாக இருக்கும் லிங்க் ஆதார் (Link Aadhaar) டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, புதிய பக்கம் தோன்றும்.


அந்த பக்கத்தில் உங்களது பான் எண் (PAN Number) மற்றும் ஆதார் எண் (Aadhaar Number) கேட்கப்படும். அதை சரியாக டைப் செய்து விடுங்கள். பிறகு வலது புறத்தில் கீழே இருக்கும் வேலிடேட் (Validate) பொத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது மொபைல் நம்பர், ஆதாரில் இருக்கும்படியான பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.


இதை கொடுத்த பிறகு லிங்க் ஆதார் (Link Aadhaar) பொத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு 6 இலக்க ஓடிடி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபியை கொடுத்து முடித்த பிறகு வேலிடேட் (Validate) பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.


இப்போது, உங்களது பான், ஆதார் இணைப்பு கோரிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்டது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகு உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தெரியப்படுத்தப்படும். இல்லையென்றாலும், வருமான வரி இ-ஃபில்லிங் பக்கத்துக்கு சென்று, ஆதார் ஸ்டேட்டஸ் (Aadhaar Status) டேப்பை கிளிக் செய்து, கோரிக்கை மீதான அப்டேட்களை பார்க்கலாம்.


More From GizBot

TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations