(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

உங்க ஹாஸ்பிடல் செலவுக்கு மத்திய அரசின் இந்த சூப்பரான திட்டம் இருக்கே.. நோட் பண்ணுங்க!


 சென்னை: மருத்துவ காப்பீடு என்பது இன்று அனைவருக்கும் தேவையான அத்தியாவசியமாகிவிட்டது. ஏனென்றால், தற்போது நமக்கு வரும் நோய்களுக்கான செலவுகள் அதிகரித்து விட்டது என்று தான் கூற வேண்டும். எனவே, இது போன்ற செலவுகளை நமக்கு வரும் மாத வருமானத்திலோ அல்லது நமது சேமிப்பு திட்டங்களுக்குள்ளோ அடக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம்.


எனவே அதற்கு உதவும் வகையில் அரசாங்கம் மருத்துவ சேவைகள் மற்றும் திட்டங்களை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்னும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைவரும் பயன் பெறும் வகையில் தொடங்கியது. இந்த திட்டத்தை மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.


Unlocking Healthcare Access  The Ayushman Bharat Yojana Explained

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி, இந்த திட்டத்திற்கு பதிவு செய்யப்பட்ட குடும்பங்கள் எந்த மருத்துவமனைகளில் வேண்டுமானாலும் ரூ. 5 லட்சத்திற்குரிய இலவச சிகிச்சையைப் பெற முடியும்.



ஆயுஷ்மான் பாரத் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் அட்டையின் பலன்களைப் பெற சில தகுதிகள் உள்ளன. இதன் விதிகளின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள், தொழிலாளர் அட்டை உள்ளவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும். நீங்கள் விரும்பினால், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் தகுதியை எளிதாகச் சரிபார்க்கலாம்.


ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: இதை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் செய்யலாம். ஆன்லைன் செயல்முறையைப் பற்றிப் பார்ப்போம்.


ஸ்டெப் 1: பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2: இப்போது உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் நம்பரைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: அதன் பிறகு ஆயுஷ்மான் பாரத் கார்டு அப்ளிகேஷன் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: இப்போது உங்களிடம் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் துல்லியமாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

ஸ்டெப் 5: பதிவு செய்யும் போது, உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும், அதை என்டர் செய்யவும்.


நீங்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதன் மூலமும் இந்த கார்டைப் பெற முடியும்.


ஆயுஷ்மான் பாரத் கார்டு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: ஆயுஷ்மான் பாரத் கார்டு விண்ணப்பிக்க, உங்களுக்கு சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும், அவை


ரேஷன் கார்டு

வருமான சான்றிதழ்

முகவரி ஆதாரம்

ஆதார் கார்டு

பான் கார்டு

பாஸ்புக்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ


More From GoodReturns

நல்ல வேலையில் இருக்கும் போதே  சேமிக்க பழகுங்க...  திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations