(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

தபால் துறை வேலை: 10ம் வகுப்பு தகுதி...ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!


 

தபால் துறை வேலை: 10ம் வகுப்பு தகுதி...ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!

தபால் துறையில் காலியாக இருக்கும்  பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தபால் துறையில் தற்போது  ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளன.  


காலியிடங்கள் - ஸ்டாப் கார் டிரைவர்



இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி  பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் , மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார்,  மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.


வயது




விண்ணப்பதாரர்  18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு  5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு உண்டு.  


கல்வி



10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் இருக்க  வேண்டும்.  


சம்பளம்



மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். அலோவன்ஸ் தொகையும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது



www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து  கீழ்கண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மே மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.  விண்ணப்ப கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS  Bengaluru'' என குறிப்பிட வேண்டும்.


முகவரி: The Manager, Mail Motor Service,  Bengaluru - 560 001  



மேலும் விவரங்கள் 


இந்த பணியிடம் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள  https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19042024_MMS_English.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations