(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

பயன்படுத்தாத பேங்க் அக்கவுண்ட் இருக்கா? கண்டிப்பா இதை செஞ்சிடுங்க.. இல்லன்னா பிரச்சனை கன்பார்ம்..!


 சென்னை: இன்றெல்லாம் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைவரும் ஆன்லைன் பேமெண்ட் தளங்களையே பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் பலர் தங்கள் பாஸ்புக் எங்குள்ளது என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். மேலும், வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்வதும் குறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


சிலர் இரண்டு மூன்று வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்பதால், அதில் சில கணக்குகள் பயன்பாட்டில் இல்லாமல் போகலாம். மீதமுள்ள பயன்படுத்தாத வங்கி கணக்குகளால் பெரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.


The Dangers of Neglecting Unused Bank Accounts  What You Need to Know

நம் வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில் அடிக்கடி இந்த கணக்குகளைப் பற்றி மறந்து போவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதால் என்ன நடக்கும் என்று உணராத சிலர், அவற்றை அப்படியே விட்டு விடுகின்றனர்.


பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளால் நாம் மிகப்பெரிய மோசடிக்கு ஆளாக நேரிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், சில சட்ட சிக்கல்களுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்.


ஆனால் எல்லாவற்றிற்கும் முன், பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளுக்கு, வங்கிகள் பொதுவாக பராமரிப்புக் கட்டணங்களை, உங்களிடம் இருந்து வசூலிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்டணங்கள் உங்கள் கணக்கில் ஏதேனும் தொகை இருந்தால் அவற்றை படிப்படியாக குறைத்துவிடும். மேலும் சில வங்கிகள் உங்களின் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை மூடவும் செய்யலாம்.


அடுத்ததாக உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், ஹேக்கர்கள் இதுபோன்ற பயன்படுத்தாத கணக்குகளையே பயன்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடுவதகாக அரசு எச்சரிக்கிறது. இதனால், ஹேக்கர்கள் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, உங்களுக்குத் தெரியாத பணப்பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதா என்பதை பேங்க் அறிக்கையின் மூலம் அடிக்கடி பார்த்து தெரிந்து கொள்ளவும்.



இதிலும் சிலர் வங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு, அந்த கணக்குகளை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வங்கிகள் உங்களது பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து விடும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும்.


மேலும் நீங்கள் கடன்களைப் பெற, உங்களது வீடு அல்லது நிலங்களைப் பயன்படுத்தி இருந்தால், அவற்றை வங்கிகள் கைப்பற்றி ஏலத்தில் விடுவதற்கு வழிவகுக்கும்.


எனவே ஏதேனும் உங்களுக்குத் தெரியாத பணப்பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதா என்பதை அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளவும். அதுபோன்ற பரிவர்த்தனைகள் நடந்திருந்தால் உடனடியாக உங்கள் வங்கி கிளைக்கு புகார் அளிக்க வேண்டும்.


வங்கி கணக்கு தானே, பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்.. என்று நினைத்து அப்படியே விட்டு விடுவது, பெரும் பிரச்சனையை பிற்காலத்தில் உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும். மேலும் நிதி இழப்பு ஏற்படும் அபாயங்களும் அதிகம் என்பதை மனதில் வைத்து செயல்படவும்.


எனவே உங்களுடைய பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை, வங்கிகளுக்கு சென்று க்ளோஸ்/டி-ஆக்டிவேட் செய்வது நல்லது.


More From GoodReturns

17,000 கிரெடிட் கார்டுகள் திடீர் முடக்கம்.. ஐசிஐசிஐ பேங்க் கொடுத்த விளக்கம்..!!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations