(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் - ஐபிசி தமிழ்


 Ministry of Education

Government Employee

Sri Lankan Peoples

Sri Lankan Schools

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 2023 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது.


குறித்த போட்டிப் பரீட்சையை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

மேலதிக நடவடிக்கை

அதன்படி, போட்டித் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், நடைபெறவிருந்த போட்டித் தேர்வு நிறுத்தப்பட்டது.


ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் | Suspension Of Teacher Recruitment Exam

இந்த மனுக்கள் தற்போது உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கான விசா! நிராகரிக்கப்படும் போலி செய்திகள்



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations