Advertisement

Responsive Advertisement

ATM-ல் பணம் எடுக்க இனி கூடுதல் கட்டணமா? அமலாக போகும் புது ஏடிஎம் பரிமாற்ற கட்டணம்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?


 ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. விரைவில் நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டு (ATM Card) மற்றும் அதன் ஏடிஎம் பரிவர்த்தனை (ATM Transactions) தொடர்பான கட்டணங்கள் (Charges) அதிகரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் (New ATM Transaction Charges) விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வசூலிக்கப்படும் தொகையை விட, இவை கணிசமாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் எவ்வளவு இருக்கும்? இது எப்போது அமலுக்கு வரும் என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.


ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (ATM Industry - CATMI) இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India - NPCI) ஆகியவற்றை ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக (withdrawing money from ATM) வாடிக்கையாளர்கள் செலுத்தும் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்கக் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


atm-cash-withdrawal-fee-hike

உயரப்போகும் போகும் புது ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் (New Increased ATM Transaction Fee Hike Expected):


இனி பொதுமக்கள் ஏடிஎம் மையங்களில் (ATM centres) இருந்து பணம் வித்ட்ரா (Cash Withdrawals) செய்யதால் அதிக கட்டணத்தை வழங்க வேண்டியதிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல போனால், CATMI ஒரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 வரை கட்டணத்தை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. எதற்காக இந்த ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது (Why this ATM transfer fee is charged)?



பரிமாற்றக் கட்டணம் என்றால் என்ன (ATM interchange fee) என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம். ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது, உங்களுக்கு ஏடிஎம் கார்டு (ATM Card) வழங்கிய வங்கிக்கு (Bank) நீங்கள் செலுத்தும் கட்டணமாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பணம் எடுக்க வங்கி ஏடிஎம் அட்டையை பயன்படுத்துகிறீர்களே, அதற்கான பயன்பாட்டு கட்டணமாக உங்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.


தற்போது, இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கு (Saving bank account) வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளை (5 free atm transactions per month) வழங்குகின்றது. ஏடிஎம் கார்டின் சொந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க இந்த 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்கபடுகிறது. மற்ற வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.


இதற்கு முன்பு எவ்வளவு ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் வசூலிக்கப்பட்டது? புது கட்டண உயர்வு எவ்வளவு தெரியுமா?


இந்த தகவல் பெரும்பாலான ஏடிஎம் பயனர்களுக்கு தெரிந்த ஒரு தகவல் தான் என்றாலும், இனி பெற போகும் கட்டண உயர்வுக்கு முன், இவற்றை ஒருமுறை பின்சென்று பார்ப்பது நல்லது. கடந்த 2021 ஆம் ஆண்டில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் (Transfer fee for ATM transactions) ரூ. 15 இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டது.


கூடுதலாக, ஒரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தின் உச்சவரம்பு ரூ.20 இல் இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டது. சமீபத்திய தகவல் படி, ஏடிஎம் உற்பத்தியாளரான ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸின் (AGS Transact Technologies) நிர்வாக இயக்குனர் ஸ்டான்லி ஜான்சன் கூறும் பொழுது, பரிமாற்ற விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரிக்கப்பட்டது. தாங்கள் ரிசர்வ் வங்கியுடன் (Reserve bank) தொடர்பில் இருப்பதாக ஜான்சன் கூறினார்.


இரண்டு ஆண்டுக்கு முன்பு அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை தொடர்ந்து, விரைவில் இந்திய ஏடிஎம் பயனர்கள் மற்றொரு கட்டண அதிகரிப்பை விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜான்சன் கூறிய தகவலின் படி, CATMI பரிமாற்ற கட்டணத்தை ரூ. 21 ஆக உயர்த்தக் கோரியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், வேறு சில ஏடிஎம் உற்பத்தியாளர்கள் ஏடிஎம் பரிமாற்ற கட்டணத்தை ரூ.23 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச எதிர்பார்ப்பு தொகையாக ரூ.23 குறிப்பிடப்பட்டுள்ளது.


More From GizBot

சொகுசு கார்.. இரண்டு அழகிகள்.. ரிமோட் கண்ட்ரோல் மூலம் ATM-களில் கொள்ளை.. போலீசாரிடம் பிடிபட்டது எப்படி?



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations