Advertisement

Responsive Advertisement

மூத்த குடிமக்களுக்கு வட்டியை வாரி குவிக்கும் வங்கிகள்.. இனி ஓய்வுக்கு பிறகும் சம்பளம்!


 சென்னை: நிலையான வைப்புத்தொகை (FD) திட்டங்கள் உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கிறது. இதனால் FD-கள் மூத்த குடிமக்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. சந்தை முதலீடுகள் போலல்லாமல், FDகள் போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. FD-களைப் பொறுத்தவரை மூத்த குடிமக்களின் வசதிக்கேற்ப வட்டியைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். பொது மக்களுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்களுக்கு பல வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), கனரா பேங்க், HDFC பேங்க் மற்றும் ICICI பேங்க் போன்ற பேங்குகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.


இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் முதியவர்களிடையே FD முதலீடுகளை தீவிரமாக ஊக்குவிக்கின்றன. பொது மக்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அப்படி அதிக சலுகைகளை வழங்கும் வங்கிகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



FD  interest rate  investment  savings  bank

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI):

மூத்த குடிமக்கள்: 400 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 7.60 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB):

மூத்த குடிமக்கள்: 400 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

சூப்பர் சீனியர் சிட்டிசன்: 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 8.05 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


பேங்க் ஆஃப் பரோடா (BOB): 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


கனரா பேங்க்: 444 நாட்கள் வரையிலான FD திட்டங்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


HDFC பேங்க்: 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான FD-களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


ICICI பேங்க்: 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


கோடக் மஹிந்திரா பேங்க்: 390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான FD-களுக்கு 7.90 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


அதேபோல வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள் என்று சொல்லப்படுகிற சிறு நிதி நிறுவனங்களும் மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகின்றன. அவற்றையும் நீங்கள் ஆராய்ந்து முடிவு எடுக்கலாம். நீங்கள் மூத்த குடிமக்களாக இருந்தால் அனைத்து வங்கிகளும் தரும் சலுகையை ஆராய்ந்து பிறகு முடிவெடுக்கலாம்.


More From GoodReturns

 FD திட்டங்களில் அதிக லாபம் பெற வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க.. இனி பணம் கொட்டும்!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations