Advertisement

Responsive Advertisement

Google மேப்பில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 அற்புதமான வசதிகள்.. இதோ முழு விவரம்..


  மேப்ஸ் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த செயலில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் மின்சார வாகனங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் முதல் வாய்ஸ் கமெண்டை பயன்படுத்தி உரையாடுவது வரை பல அம்சங்கள் வந்துவிட்டன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.


கூகுள் மேப்ஸ்-ஜெமினி: கூகுள் மேப்ஸ் செயலி உடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜெமினி-ஐ (Gemini AI) சேர்ந்து இயங்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது கூகுள் நிறுவனம். எனவே இதன் மூலம் நீங்கள் வாய்ஸ் கமெண்ட் வாயிலாகவே நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் குறிப்புகளை பெற முடியும். அதுவும் பைக் ஓட்டும் போது இந்த இந்த ஜெமினி மற்றும் கூகுள் மேப்ஸ் உடனான உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.



google-maps

சார்ஜிங் ஸ்டேஷன்: நீங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்துபவராக இருந்தால், அதற்கான சார்ஜிங் செய்யும் நிலையத்தைக் கூகுள் மேப்ஸ் வாயிலாக மிகவும் எளிதாக கண்டறிய முடியும். இந்த அம்சம் தற்போது பல்வேறு நாடுகளிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்து அதில் உங்களது சார்ஜர் டைப்பை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் உங்களுக்கு அருகே இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் சார்ஜ் செய்யும் நிலையத்தை (electric vehicle charging stations) கூகுள் மேப்ஸ் கண்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும்.


குறிப்பாக டூவீலர், த்ரீ வீலர், ஃபோர் வீலர் என எதுவாக இருந்தாலும் கூகுள் மேப்ஸ் உங்களுக்கு ஏற்ற சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல்: கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அது சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை பார்க்க முடியும். குறிப்பாக இதற்கு ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல் (street view time travel) வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த வசதி சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.


google-maps

லைவ் லொகேஷன் (live location): கூகுள் மேப்ஸ் செயலியில் உங்களது தற்போதைய இருப்பிடத்தை உங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் அனுப்பலாம். அதாவது நீங்கள் பயணம் செய்யும்போது உங்களது லைவ் லொகேஷனை குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ நீங்கள் விரும்பும் நபருக்குத் தெரிவிக்கும் வகையில் மேப்ஸ் செயலியில் ஷேர் அப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சில சமயத்தில் இந்த வசதியை நீங்கள் ஆஃப் செய்ய விரும்பினால் லொகேஷன் செட்டிங் பகுதிக்குச் சென்று ஆப் செய்துவிடலாம். ஒருவேளை இதை நிரந்தரமாக ஆன் செய்ய விரும்பினால் உங்களின் பேட்டரி வேகமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


பார்க்கிங் லொகேஷன் (Parking location): தற்போது முக்கியமான நகரங்களில் வாகனங்களின் பார்க்கிங் இடங்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்றாலும், வாகனங்களை எங்கு நிறுத்துகிறோம் என்பதையும் சில சமயம் மறந்துவிடுவோம். இதற்கு எளிய தீர்வாக கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தி, நீங்கள் உங்களது வாகனத்தை எங்கே பார்க் செய்து உள்ளீர்கள் என்பதை மிக எளிமையாகக் கண்டறிய முடியும். Save Your Vehicle Parking location என்பதைப் பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் சரியான ஜிபிஎஸ் இருப்பிடத்தைக் குறிக்கலாம், இதன் மூலம் நீங்கள் திரும்பி வரும்போது கார்/பைக் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டறியலாம்.


வானிலை அறிக்கை (weather information): கூகுள் மேப்ஸ் செயலியில் வானிலை அறிக்கை பற்றிய தகவல்களை நேரடியாகப் பெறமுடியும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியின் காலநிலை, காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றை எளிமையாகப் பார்க்க முடியும் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயனர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


இன்டோர் லைவ் வியூ (indoor live view): மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் அல்லது விமான நிலையித்தில் வழி தெரியாமல் மட்டிக் கொள்வது ஒரு சாதாரணமான நிகழ்வாகும். எனவே இப்படிபட்ட ஒரு சங்கடமான சூழலில் இருந்து வெளிவர கூகுள் மேப்ஸ் உங்களுக்கு

உதவும். அதாவது கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள இன்டோர் லைவ் வியூ அம்சம் ஆனது ஷாப்பிங் மால்கள் அல்லது விமான நிலையம் அல்லது வேறு ஏதேனும் பிரபலமான மக்கள் அதிகம் கூடும் கட்டுமானங்களுக்கு உள்ளே, நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அந்த குறிப்பிட்ட கடையின் பெயரோ அல்லது வெளியே செல்லும் வழியையும் காண்பிக்கும். ஆனால் இன்டோர் லைவ் வியூ அம்சம் ஆனது தற்போது அமெரிக்காவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஆஃப்லைன் நேவிகேஷன்(Offline Navigation) அம்சம்: இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மேப்பை நீங்கள் டவுன்லோட் செய்து கொண்டு இன்டர்நெட் வசதி இல்லாமலே அந்த இடத்தை பற்றிய தகவல்களை பார்க்கும் வசதியை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது. அதாவது நீங்கள் சரியான இணைய வசதி இல்லாத இடத்திற்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தால், அங்கு செல்வதற்கு முன்பு அந்த பகுதியை முழுவதும் கூகுள் மேப்பில் டவுன்லோடு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் அந்த இடத்திற்குச் சென்றதும் இணைய வசதி செயல் இழந்தாலும் ஏற்கனவே டவுன்லோட் செய்துள்ள கூகுள் மேப்பை வைத்துக் கொண்டு எந்தவித தடங்களும் இல்லாமல் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


google-maps

ஹோம் மற்றும் வொர்க் லொகேஷன்: மெட்ரோ நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் நமக்கு மிகுந்த அலுப்பைக் கொடுத்துவிடும். எனவே இதை தவிர்க்கும் வகையில் கூகுள் மேப்ஸில் நீங்கள் உங்களது அலுவலகத்தையும், வீட்டின் லொகேஷனையும் (work and home location) செட் செய்து வைத்துக் கொண்டால், நீங்கள் கிளம்பும்போது டிராஃபிக் இல்லாத மற்றும் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய வேண்டிய வழியைக் கூகுள் மேப்ஸ் உங்களுக்குக் காண்பிக்கும்.


AI உதவியுடன் புதிய இடத்தை கண்டறியலாம்: கூகுள் மேப்ஸ் செயலியில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி இதுவரை கண்டறியாத புதிய இடங்களைக் கூட மிகவும் எளிதாகக் கண்டறிய முடியும். அதாவது பார்ட்டி செய்வதற்குச் சிறந்த இடம் எது என்றும், குறிப்பிட்ட பொருட்களை வாங்குவதற்கான கடை எங்கு உள்ளது என்றும் கேட்கும் பட்சத்தில் இந்த ஏஐ அம்சத்தைப் பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் குறிப்பிட்ட இடத்தை உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் தற்போது குறிப்பிட்ட சில யூசர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.


source: indianexpress


More From GizBot

இனி ஈஸியா பயணம் செய்யலாம்.! கூகுளின் பிரம்மாண்ட திட்டம்.. 3டி வியூவில் மேப்ஸ்.. கலக்கும் Google Maps.!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations