Advertisement

Responsive Advertisement

பர்சனல் லோன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.. இதெல்லாம் ரொம்ப முக்கியம்!


 சென்னை: தற்போது பர்சனல் லோன் வழங்கும் வங்கிகள் அதிகரித்துவிட்டன. ஏதாவது தேவைக்காக பணம் வேண்டும் என்றால், தனி நபர்கள் சென்று வங்கியில் உடனடியாக பர்சனல் லோன்களை பெற்றுக் கொள்ளலாம். தனிநபர்களாக இருந்தால் அவர்களுடைய சம்பளத்தின் அடிப்படையில் வங்கிகள் பர்சனல் லோன்களை வழங்குகின்றன. சுய தொழில் செய்பவர்களுக்கு, அவர்களின் வருமான வரி வருமானத்தின் அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன. இந்தப் பதிவு இல்ல பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.


பர்சனல் லோன் ஒருவர் பெரும் மாத சம்பள வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவருடைய தகுதி மற்றும் கடனின் கால அளவைப் பொறுத்து வட்டி விகிதம் 12 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை மாறுபடலாம் என்றாலும், வாடிக்கையாளர்கள் பர்சனல் லோன் பெறும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களை விட இந்த பர்சனல் லோன்களுக்கு வட்டி விகிதம் அதிகம். உங்கள் ஆண்டு சம்பளத்தை விட அதிகமான கடன் தொகையை வாங்குவது, உங்கள் நிதி நிலைக்கு சுமையாக மாறலாம்.



EMI  repo rate  interest  bank  loan

பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


வட்டி விகிதம்: முன்பு கூறியது போல் வீட்டு கடன்களை விட, பர்சனல் லோன்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுப்பது சிறந்தது.


தேவை: உங்களுக்கு உண்மையில் கடன் தேவையா? என்பதை உணர்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள். பர்சனல் லோன்களை பெற்று தேவையற்ற செலவு செய்வது, பிற்காலத்தில் உங்களுக்கு கஷ்டத்தை விளைவிக்கலாம். எனவே, நீங்கள் எடுக்கும் பர்சனல் லோன் பயனுள்ளதா? என்பதை தெரிந்து கொள்வது சிறந்தது.


கட்டணங்கள்: பொதுவாக எந்த கடன்களாக இருந்தாலும், வங்கிகள் ப்ராசசிங் கட்டணங்களை வசூலிக்கின்றன. இது போன்ற கட்டணங்களைப் பற்றி ஆராய்வதும் நல்லதே.


எப்பொழுது பர்சனல் லோன் பெறலாம்?: சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போது, நீங்கள் பர்சனல் லோன் பெறுவதைப் பற்றி யோசிக்கலாம். உதாரணமாக அவசர மருத்துவச் செலவு அல்லது பிற அவசர தேவைகள் போன்றவற்றிற்கு, நீங்கள் பர்சனல் லோன் பெறலாம். சிலர் பர்சனல் லோன்களைப் பெற்று கேஜெட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். இது போன்ற செயல்களுக்காக பர்சனல் லோன்களை பெறுவதைத் தவிர்க்கலாம். சிலருக்கு கிரெடிட் கார்டு அவுட்ஸ்டாண்டிங் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளிலும், நீங்கள் பர்சனல் லோன் வாங்குவது குறித்து யோசிக்கலாம். ஏனெனில் கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு பர்சனல் லோன் பெறுவது சிறந்த தேர்வாக இருக்கும்.


பர்சனல் லோன்களின் கால அளவு எவ்வளவு?: தனிநபர் பெறும் கடன் தொகையை பொறுத்து இந்த கால அளவு மாறுபடலாம்.


More From GoodReturns

ரெப்போ விகிதம் குறையும் போது ஏன் வீட்டுக்கடன் வட்டி குறைவதில்லை.. அப்போ இதை பாருங்க..!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations