Advertisement

Responsive Advertisement

ரேஷன் அட்டை - ஆதார் இணைக்க புது இறுதி நாள்.. மீண்டும் காலக்கெடு நீடிப்பு.. எப்போது?


 ரேஷன் அட்டை - ஆதார் இணைக்க புது இறுதி நாள்.. மீண்டும் காலக்கெடு நீடிப்பு.. எப்போது?

Published: Thursday, June 13, 2024, 11:29 [IST]

ரேஷன் கார்டு (Ration card) பயனர்களே கொஞ்சம் கவனியுங்க. மீண்டும் வந்த அதிரடி உத்தரவு. உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது உணவு மானியக் கணக்குகளுடன் (food subsidy accounts), உங்கள் ஆதார் அட்டை (Aadhaar card) விபரங்களை இணைக்க வழங்கப்பட இறுதிக்கட்ட காலக்கெடு இப்போது மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூன் 30, 2024 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். இப்போது இறுதி காலக்கெடு நாள் மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய இறுதி நாள் என்று வருகிறதென்ற விபரத்தை இப்போது பார்க்கலாம்.


இதுவரை உங்கள் ரேஷன் கார்டு அட்டையுடன், உங்கள் ஆதார் கார்டு விபரங்களை நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், இப்போதே ஆன்லைன் (Online) அல்லது ஆப்லைன் (Offline) வழியாக இணைத்துவிடுங்கள். இதற்கான இறுதி காலக்கெடுவை இந்திய அரசாங்கம் இப்போது மீண்டும் ஒரு முறை நீட்டித்துள்ளது (Last date to link Ration card with Aadhaar extended).


new-deadline-ration-aadhaar-card-details-september

உணவு மானியக் கணக்குகள் அல்லது பொது விநியோக அமைப்பு (PDS) ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) தெரிவித்துள்ள தகவலின் படி, பொதுமக்களின் ரேஷன் கார்டு உடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்காக வழங்கப்பட ஜூன் 30, 2024 ஆம் தேதி இப்போது நீடிக்கப்பட்டுள்ளது.



புதிய இறுதிக்கட்ட காலக்கெடு நாளாக வரும் செப்டம்பர் 30, 2024 (September 30, 2024) ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் ஆதார் விபரங்களை நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்துவிடுங்கள். ரேஷன் அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கான புதிய இறுதிக்கட்ட காலக்கெடுவாக செப்டம்பர் 30, 2024 ஆம் தேதி (New deadline to link ration card with aadhaar card extended) அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை செய்ய தவறும் பச்சத்தில், ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு உணவு பொருட்கள் (food supply) மற்றும் ரேஷன் (ration) பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று தங்களின் ஆதார் விபரங்களை இணைக்கலாம்.


அல்லது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் போர்ட்டல் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் வியாபரங்களை இணைக்கலாம் (Link Aadhaar Details With Ration Card Online) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு உடன் உங்கள் ஆதார் விபரங்களை இணைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.


- அதிகாரப்பூர்வ Public Distribution System (PDS) தளத்திற்கு செல்லவும்.

- செயலில் உள்ள ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான (Ration card Aadhaar Linking) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் ரேஷன் கார்டு எண்ணை (Ration card number) உள்ளிடவும்.

- அதனை தொடர்ந்து ஆதார் கார்டு எண்ணை (Aadhaar card number) உள்ளிடவும்.


- பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை (Mobile Number) உள்ளிட்டு சப்மிட் (Submit) கிளிக் செய்யவும்.

- உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP விபரங்களை உள்ளிடவும்.

- OTP விபரங்களை ஆதார் - ரேஷன் லிங்க் பக்கத்தில் (Aadhaar - Ration Link Page) உள்ளிடவும்.

- உங்கள் ஆதார் விபரங்கள் இணைப்பதற்கான வேலைகள் சரியாக சமர்ப்பிக்கப்படும்.


அவ்வளவு தான், உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். செப்டம்பர் 30, 2024 ஆம் தேதிக்கு முன்பாக உங்கள் ரேஷன் கார்டு விபரங்களை ஆதார் கார்டுடன் இணைத்து, ரேஷன் சேவையை தடையில்லாமல் பெற அறிவுரைக்கப்பட்டுள்ளது.


More From GizBot

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations