Advertisement

Responsive Advertisement

ஆதார்ல உடனே இதை பண்ணிடுங்க.. உங்க பழைய போட்டோ எண்ட்ரோல்மெண்ட்.. பயோமெட்ரிக் வெரிபிகேஷன்.. என்ன செய்ய வேண்டும்?


 ஆதார் கார்டு வந்தபோது எடுத்த போட்டோவை இன்றளவும் மாற்றாமல் பலர் வைத்திருக்கிறார்கள். இதனால், அதை வெரிபிகேஷன் ஆவணமாக கொடுக்கும்போது, அடையாளமே தெரியாத அளவுக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக ஆதாரில் இருக்கும் பழைய போட்டோக்களை அப்டேட் செய்யுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) சொல்கிறது. ஆகவே, ஆதார் கார்டிவ் பழைய போட்டோவை (Aadhaar Card Old Photo) வைத்திருக்கும் நபர்கள் இதை கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.


இப்போதெல்லாமல், எங்கு சென்றாலும் அடையாள சான்றிதழுக்கு முதலில் ஆதார் கார்டு மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால், இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் கார்டில் பழைய விவரங்கள் இருந்தால் அதை புதுப்பிக்குமாறு தெரிவித்து வருகிறது. இருப்பினும், பலர் ஆதார் விவரங்களை புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர்.


Aadhaar Card Old Photo Change

இதில் பழைய போட்டோவை அப்டேட் செய்யாமல் இருப்பதே அதிகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பெயர், முகவரி மாறவில்லை, அப்புறம் என்ன? என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களது போட்டோ இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கும். இருப்பினும் அதை அடையாள சான்றாக பயன்படுத்துவார்கள்.


ஆகவே, ஆதாரில் இருக்கும் போட்டோவுக்கும் அதை கொடுக்கும் நபரின் இப்போதைய தோற்றத்துக்கும் சம்பந்தமே இருக்காது. இதனால், முதலீட்டு திட்டங்கள், தேர்வுகள் அல்லது ஆன்லைன் போட்டோ சமர்பிப்பு போன்ற பல நேரங்களில் ஆதாரில் இருந்து போட்டோக்களை எடுக்கும்போது பழைய போட்டோ அதில் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது.


இது பிற்காலத்தில் சிக்கல்களை கொண்டுவரலாம். ஆகவே, ஆதார் கார்டில் இருக்கும் பழைய போட்டோக்களை எப்படி மாற்றுவது? ஆன்லைன் தொடங்கி ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் (Aadhaar Enrolment Centre) வரையில் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Aadhaar Card Old Photo Change

ஆதார் கார்டு போட்டோ மாற்றுவது எப்படி? மத்திய அரசின் யுஐடிஏஐ (UIDAI) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த படிவத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து கொள்ளுங்கள். அதன்பின்பு, அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்புங்கள்.



இப்போது, அருகில் இருக்கும் ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் அல்லது ஆதார் சேவா கேந்திராவுக்கு (Aadhaar Sewa Kendra) சென்று, அங்கு நிரப்பப்பட்ட படிவத்தை கொடுங்கள். இப்போது, உங்களது பயோமெட்ரிங் விவரங்கள் (Biometric Informations) கொடுக்கப்பட வேண்டும். அப்போது, உங்களது தற்போதை தோற்றத்துடன் போட்டோ எடுக்கப்படும்.


இந்த போட்டோ உங்களது ஆதார் கார்டில் பதிவு செய்யப்படும். இதற்காக அப்டேட் ரிக்கொஸ்ட் நம்பர் (Update Request Number) கொடுக்கப்படும். இதை வைத்து அப்டேட் ஸ்டேட்டஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அப்டேட் செய்தவுடன் அதிகபட்சம் 19 நாட்களுக்குள் அந்த விவரங்கள் ஆதார் கார்டில் பதிவாகிவிடும்.


இந்த அப்டேட்டை செய்யும்போது, உங்களது பயோமெட்ரிங் விவரங்கள் நேரடியாக வெரிபிகேஷன் செய்யப்படுவதால், நீங்கள் எந்தவித அடையாள சான்றிதழ்களையும் ஆதார் சென்டருக்கு எடுத்த செல்ல வேண்டியதில்லை. இப்போது, ஆதார் கார்டில் புதிய போட்டோ அப்டேட் செய்யப்பட்ட பிறகு அதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பார்ப்போம்.



இப்போது, யுஐடிஏஐ வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அதில் மை ஆதார் டேப்பை கிளிக் செய்து, டவுன்லோட் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஆதார் நம்பர் கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டு கேப்ச்சா கோடு கொடுங்கள். இப்போது, சென்ட் ஓடிபி பட்டனை கிளிக் செய்யுங்கள். ஓடிபி வந்தவுடன் அதை கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


More From GizBot

ஆதார் அப்டேட் செய்ய இனி ரூ.100 கட்டணமா? எந்தெந்த தகவல் திருத்தத்திற்கு எவ்வளவு கட்டணம்? முழு விபரம் இதோ..



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations