Advertisement

Responsive Advertisement

கிரெடிட் கார்டு பயனர்களே! கார்டு வாங்கும் போது இந்த 7 மறைமுக கட்டணங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

நம் நாட்டில் கிரெடிட் கார்டுகளின் புகழ் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அனால், பல கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு கட்டணங்கள் பற்றித் தெரிவதில்லை. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வெவ்வேறு பெயர்களில் கணிசமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இவற்றை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், செலவு அதிகமாகிவிடும். நீங்கள் தற்போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்களோ அல்லது ஒன்றுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.


ஜாயினிங் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணங்கள்: பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஜாயினிங் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜாயினிங் கட்டணம் ஒரு முறை செலுத்தப்பட வேண்டும். அதேசமயம் வருடாந்திர கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்பச் செலுத்த வேண்டும்.



Credit Card                                                                   bank  credit score

நிதிக் கட்டணங்கள் (Finance Charges): உங்கள் கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் முழுமையாகச் செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு வங்கி நிதிக் கட்டணங்களை வசூலிக்கிறது. நிபுணர்கள் குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்துவதை விட, முழு பில்லையும் செலுத்தி இந்தக் கட்டணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.


கேஷ் அட்வான்ஸ் கட்டணம்: உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அல்லது வங்கிகளால் இந்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது.



பெட்ரோல் பங்குகளில் கட்டணம் (Surcharge at Petrol Pumps): கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்பது பல கார்டு பயனர்களுக்குத் தெரியாது.


வெளிநாட்டு நாணய மாற்று விகித கட்டணம் (Forex Markup Fee): நீங்கள் வெளிநாட்டில் பரிவர்த்தனைக்கு உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் நாணய மாற்று விகிதத்திற்கான கட்டணத்தை (forex markup fee) விதிக்கும்.


கார்டு மாற்றுக் கட்டணம்: கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, மாற்று அட்டையை வழங்க நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.



வரம்பு மீறல் கட்டணம் (Over Limit Fee): உங்கள் கிரெடிட் கார்டின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை நீங்கள் மீறினால், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அல்லது கார்டு நிறுவனங்கள் அதிக வரம்புக் கட்டணத்தை வசூலிக்கின்றன.


இந்தக் கட்டணங்களைப் புரிந்துகொள்வது உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.


More From GoodReturns

 ஆன் டைமுக்கு EMI கட்டியும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா? இதெல்லாம் காரணமா இருக்கலாம்!

 


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations