Advertisement

Responsive Advertisement

SBI Vs போஸ்ட் ஆபீஸ்.. ரூ. 2 லட்சம் பிக்சட் டெபாசிட்டுக்கு யார் அதிக வட்டி தருகிறார்கள் தெரியுமா?


 நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD) ஒரு நல்ல தேர்வாக இருக்கும். பொதுவாக வங்கிகளும் தபால் நிலையங்களும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. 5 வருட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், எங்கு சென்று முதலீடு செய்வது சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில், 5 வருட கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் தபால் நிலையத்தின் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.



பொதுவாகவே ஃபிக்ஸட் டெபாசிட்களில், நாம் டெபாசிட் செய்ய இருக்கும்போது வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக வட்டி எங்கு வழங்கப்படுகிறது? என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக ரூ. 2 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால், எந்த நிறுவனத்தில் அதிக வட்டி தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்யும்போது 5 வருடம் கழித்து உங்களுடைய வருமானம் அதிகமாக இருக்கும்.



SBI  investment  savings

இதற்கு உதவும் வகையில் SBI வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பற்றியும், அதே 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்தும் பார்ப்போம். தற்போது, போஸ்ட் ஆபீஸ்களில் 5 ஆண்டு FD-களுக்கு 7.5 சதவீத வட்டி வருமானத்தை வழங்குகிறது, அதேசமயம் SBI பேங்க் 6.75 சதவீத வட்டி வருமானத்தை வழங்குகிறது.


SBI பேங்கில் 5 வருடங்களுக்கு, ரூ. 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்?: 6.75% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு SBI பேங்கில், ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டியாக ரூ. 79,500 கிடைக்கும். எனவே, முதிர்ச்சியின் போது, நீங்கள் மொத்தம் ரூ. 2,79,500 பெறுவீர்கள். மூத்த குடிமக்கள் SBI பேங்கில் 5 ஆண்டுகளுக்கு FD திட்டத்தில் முதலீடு செய்தால் 7.25 சதவீத வட்டி பெறுவார்கள். அதன் படி மூத்த குடிமக்கள் வட்டியாக ரூ. 86,452 பெறுவார்கள், இதன் விளைவாக முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 2,86,452 கிடைக்கும்.



போஸ்ட் ஆபீஸில் 5 வருடங்களுக்கு, ரூ. 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்?: போஸ்ட் ஆபீஸில் 5 வருட FD-களுக்கு, 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ. 89,990 வட்டி பெறுவீர்கள். அதன் படி, முதிர்ச்சியின் போது, நீங்கள் மொத்தம் ரூ. 2,89,990 பெறுவீர்கள். மூத்த குடிமக்கள் முதிர்ச்சியின் போது அதே வட்டி விகிதத்தையும் மொத்தத் தொகையையும் பெறுகிறார்கள். SBI வங்கியுடன் ஒப்பிடுகையில், போஸ்ட் ஆபீஸ்களில் 5 வருட FD-களுக்கு அதிக வருமானத்தை வழங்குகிறது.


சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் SBI பேங்க்.. அதுவும் 15 நிமிடத்தில்.. வேற லெவல்!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations