Advertisement

Responsive Advertisement

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளீர்களா? பட்ஜெட்டில் உங்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

இந்திய மக்களிடம் இருந்த நீண்ட நாள் கேள்வி, பட்ஜெட் எப்போது என்பது தான், இதற்கான பதில் சனிக்கிழமை மாலையில் வெளியானது.


ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி 3.0 ஆட்சின் முதல் வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூலை 22ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். இதை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



budget 2024  Nirmala Sitharaman                        2024  deposit  bank


இந்த பட்ஜெட் அறிக்கை குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கும்வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மத்திய அரசு அளிக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரை மீது மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்த விஷயம் குறித்து கடந்த வாரம் நிதித்துறை அதிகாரிகளுடனான மத்திய நிதியமைச்சக கூட்டத்தில் வங்கிகள் பிரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது நடைமுறைக்கு வந்தால் வங்கிகளில் கூடுதல் டெபாசிட் செய்யப்படும், இதனால் வங்கிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் கிடைப்பது மட்டும் அல்லாமல் அரசு ஒவ்வொரு முறையும் நிதி உட்செலுத்த வேண்டிய அவசியம் குறையும்.



வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மத்திய அரசு அளிக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 பரிந்துரையின் இறுதி முடிவை பட்ஜெட் அறிவிப்பில் தான் உறுதி செய்ய முடியும்.


2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில், எளிமையான வரி முறையான புதிய வரி முறையை மத்திய நிதியமைச்சகம் அறிமுகம் செய்தது. இதன் மூலம், வரி செலுத்துபவர்கள் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது.



பழைய வரி விதிப்பின் கீழ், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80TTA படி, வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வரையிலான வட்டி வருமானம் வரி விலக்கு கிடைக்கிறது.


இதுவே 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இந்த வரம்பு ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் பிரிவு 80 TTB கீழ் நிலையான டெபாசிட்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானம் இதில் அடங்கும்.



புதிய வரி விதிப்பின் கீழ், இந்த சலுகைகள் நீக்கப்பட்ட இருந்தாலும், பிரிவு 10(15)(i) கீழ், தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் வட்டி பெறும் வரி செலுத்துபவர்கள் சலுகை உண்டு. இந்த வரி பிரிவின் கீழ் தனிநபர் கணக்குகளுக்கு ரூ.3,500 வரையிலும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.7,000 வரையிலும் வரி விலக்கு கோர முடியும்.


More From GoodReturns

ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations