Advertisement

Responsive Advertisement

தமிழ்நாடு அரசு வேலை: 75,000+ பணியிடங்கள்...


 தமிழ்நாடு அரசு துறைகளில்  இருக்கும்  75,000க்கும் அதிகமான  பணியிடங்கள் இன்னும் 18 மாதங்களில் நிரப்பப்பட உள்ளதாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.



தற்போது, 75,000க்கு மேற்பட்ட பணியிடங்களை இன்னும் 18 மாதங்களில்  நிரப்ப தமிழ்நாடு அரசு  திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் ஜனவரி 2026ம் ஆண்டுக்குள் நிரப்படவுள்ளது.


அதன்படி,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - 17,595 பணியிடங்கள்


ஆசிரியர் தேர்வு வாரியம் - 19,260 பணியிடங்கள்




மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் - 3,041 பணியிடங்கள்


சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் - 6,688 பணியிடங்கள்


சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் - 6,688 பணியிடங்கள்


சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்  - 30,219 பணியிடங்கள்



என மொத்தம் 76,803 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது.



தேர்வு குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations