Advertisement

Responsive Advertisement

IRCTC நேரடி அறிவிப்பு.. புது முன்பதிவு டிக்கெட் ரூல்ஸ்.. மீறினால் ரூ.10000 அபராதம் 3 வருட சிறை.. உண்மையா?


 ஐஆர்சிடிசி (IRCTC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) சமீபத்தில் புதிய முன்பதிவு விதியை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதன்படி, IRCTC அக்கௌன்ட் மூலம் ரயில் டிக்கெட்களை ரிசர்வ் செய்யும் பயணிகள், அவர்களின் குடும்பத்தினர் தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு (Reservation ticket) செய்து கொடுத்தால், இனி ரூ.10,000 அபராதம் அல்லது 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இது உண்மையா? இல்லையா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இப்போது எழுந்துள்ளது.



இந்திய ரயில்வே உண்மையிலேயே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. இந்த தகவலின் உண்மை தன்மை பற்றி ஆராய்ந்த போது தான் விஷயம் தெளிவாக புரிந்தது. சமீபத்தில் எக்ஸ் (X) வலைப்பக்கம் வழியாக வெளியான தகவலில், IRCTC இணையதள அக்கௌன்ட் (IRCTC online account) மூலம் இனி குடும்பத்தினர்களுக்கு மட்டுமே IRCTC பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.



irctc-rule-reservation-india-online

IRCTC நேரடி அறிவிப்பு.. புது முன்பதிவு டிக்கெட் ரூல்ஸ் (IRCTC Direct Announcement About New Booking Ticket Rules):


அதேபோல், ஒரு தனிநபர் கணக்கிலிருந்து, நண்பர்கள் அல்லது தெரியாத மூன்றாம் நபர்களுக்காக இனி டிக்கெட் முன்பதிவு செய்துகொடுத்தல், 1989 ரயில்வே சட்டத்தின் 143வது பிரிவு படி (Indian Railway Act 1989 143 Section) ரூ.10,000 அல்லது 3 ஆண்டு சிறை தண்டை வழங்கப்படும் என்றும் அந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி காட்டுத் தீ போல இந்தியா முழுக்க பரவியது. இதனால், ரயில் பயணிகள் குழப்பத்தை சந்தித்தனர்.



குழப்பத்தில் இருந்து IRCTC பயணிகளுக்கு தற்போது IRCTC நேரடியாக பதில் வழங்கியுள்ளது. தனிநபர் IRCTC அக்கௌன்ட் மூலம் பயணிகள் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்துகொடுக்கலாம் என்று கூறியுள்ளது. சமூக வலைத்தளம் (Social media), வாட்ஸ்அப் (WhatsApp), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்களில் தவறாக பரவும் தகவலை IRCTC அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.


குறிப்பாக, நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்பதிவு செய்து கொடுத்தால், ரூ. 10,000 அபராதம் அல்லது சிறை தண்டனை உறுதி என்பதை IRCTC அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்திய ரயில்வே சட்டம் 143 பிரிவு படி, யாருக்கெல்லாம் இந்த அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலையும் IRCTC தெளிவாக விளக்கமளித்துள்ளது. முதலில் 1989 இந்திய ரயில்வே சட்டம் 143 பிரிவு என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வோம்.


யாருக்கெல்லாம் ரூ.10000 அபராதம் 3 வருட சிறை உறுதி? ஒரு IRCTC பயனர் எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்?



ரயில்வே ஊழியராகவோ (Employee) அல்லது இதன் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவராகவோ அல்லது ஏஜென்ட்டாகவோ (Agent) இல்லாத எவரேனும், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவை மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பணத்திற்காக விற்பனை செய்யும் தொழிலை மேற்கொள்ளும் பச்சத்தில், அவர்கள் மீது 1989 இந்திய ரயில்வே சட்டம் 143 பிரிவு படி, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் விதிக்கப்டும் என்று IRCTC கூறியுள்ளது.


அதேபோல், ஒரு IRCTC கணக்கை வைத்து ஒரு தனிபர் 12 டிக்கெட் வரை ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்று IRCTC தகவல் குறிப்பிடுகிறது. அதேபோ, ஆதார் அட்டை ஆவணங்களை சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட IRCTC பயனர்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 24 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று IRCTC அதன் X பக்கம் வழியாக அறிவித்துள்ளது. இந்த தகவலை பொதுமக்கள் அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துக்கங்கள்.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations