Advertisement

Responsive Advertisement

போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்; அரசு உத்தரவாதம், ரூ.80 ஆயிரம் ரிட்டன்: இந்தத் திட்டத்தை பாருங்க!


 இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து சேமித்து முதலீடு செய்யலாம்.

06 Jul 2024 23:21 IST

author-image

இந்தியாவில் ரிஸ்க்கை தவிர்க்க விரும்புபவர்கள், அரசு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அந்த வகையில், பெரும்பாலான மக்கள் தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகின்றனர்.



இந்தச் சூழ்நிலையில், தபால் அலுவலகத்தின் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். இது உங்களுக்கு ரூ. 80,000 உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.


அஞ்சலக ஆர்.டி. திட்டம்

அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.7 ஆயிரம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் 4,20,000 ரூபாய் முதலீடு செய்யப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வு முடிந்ததும், உங்களுக்கு 79,564 ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது மொத்தம் 4,99,564 ரூபாய் கிடைக்கும்.



நீங்கள் ரூ.5 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் மொத்தம் 60,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 6.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 56,830 வட்டி கிடைக்கும். ஆக முதிர்வின் போது மொத்தம் ரூ. 3,56,830 பெறுவீர்கள்.


வட்டி திருத்தம்

பொதுவாக ஒவ்வொரு காலாண்டின் போதும் (3 மாதங்களுக்கு ஒருமுறை) தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் வட்டி விகித்தை அரசு மாற்றுகிறது. அஞ்சல் அலுவலக ஆர்.டி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வட்டியில் டி.டி.எஸ் கழிக்கப்படுகிறது. இது ஐ.டி.ஆர் ஐப் பெற்ற பிறகு வருமானத்திற்கு ஏற்ப திருப்பியளிக்கப்படும். ஆர்.டி இல் பெறப்பட்ட வட்டிக்கு 10 சதவிகிதம் டி.டி.எஸ் பொருந்தும். ஆர்.டி.யில் பெறப்பட்ட வட்டி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietam


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations