Advertisement

Responsive Advertisement

எஸ்இடிசி நடத்துனர்களுக்கு ஜாக்பாட்! இனி யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேணாம்!


 தமிழகத்தில் இயங்கும் எஸ்இடிசி பஸ்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை போக்குவரத்து கழகம் எடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி பயணிகள் எஸ்இடிசி பஸ்களில் பயணம் செய்யும்போது டிக்கெட் கட்டணத்திற்காக நேரடியாக பணம் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதை மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை இன்று யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். இது மக்களுக்கு சுலபமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருப்பதால் இந்த வழிமுறையை மக்கள் அதிகம் பின்பற்ற துவங்கி விட்டார்கள்.




இந்நிலையில் அரசு சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை செய்யும் இடங்களில் இதுவரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. ஆன்லைன் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மாற்றி விட்டார்கள். ஆனால் ஆஃப்லைன் மூலம் நடக்கும் பரிவத்தனையை டிஜிட்டல் முறையில் பெரிய அளவில் மாற்றம் பெறவில்லை. முக்கியமாக பஸ் டிக்கெட் வாங்க கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டிய தேவை தான் இருக்கிறது.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள எஸ்இடிசி பஸ்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட் விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக பஸ் நடத்துனர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் இயந்திரத்தை வழங்கினார்கள். இந்த இயந்திரம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட் விநியோகம் செய்யும் கருவியாக இருக்கிறது.



இந்நிலையில் நடத்துனர்கள் மத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் விநியோகம் செய்யும் ஆர்வத்தை அதிகரிக்க எஸ்இடிசி நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி அதிக அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நடத்துனர்களுக்கு பரிசு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் கிடைக்கிறது.



இதன் மூலம் இனி எஸ்இடிசியில் உள்ள நடத்துனர்கள் அதிக ஆர்வமுடன் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முயற்சி செய்வார்கள். இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் விநியோகம் ஆகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பழக்கம் அதிகரிக்கும். இனி பஸ்களிலும் டிஜிட்டல் மூலம் பணப்பரிவினை செய்து டிக்கெட் பெறலாம் என்ற புரிதல் மக்களுக்கு உருவாகும். இதன் காரணமாக இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படியாக தமிழகம் முழுவதும் இயங்கும் எஸ்இடிசி பஸ்களில் எந்த நடத்துனர் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்துள்ளாரோ அவருக்கு இந்த பரிசை வழங்க எஸ்இடிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காகத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டிக்கெட் பெறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எஸ்இடிசி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.



எஸ்இடிசி பஸ்களை பொருத்தவரை நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்கள் என்பதால் இதன் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வது சுலபமாக இருக்கும். பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக தான் இருக்கும். ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் இந்த டிஜிட்டல் பணப்பரிவினை கொண்டு வருவதில் சில சிக்கல்கள் இருக்கிறது.


லோக்கல் பஸ்களில் இப்படியான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வரும்போது, இதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் இதற்கு யார் பொறுப்பாவார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. அடுத்ததாக இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது சில நேரம் காலதாமதம் ஆகும் பட்சத்தில் பஸ்ஸின் பயணம் பிரச்சனைக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது. குறைவான தூரம் மட்டுமே இந்த பஸ் பயணிப்பதால் இந்த சிக்கல்களை சமாளிக்க போக்குவரத்து கழகம் வழி தேடி வருகிறது.



டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனியார் நிறுவனங்கள் பல டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான வகையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வந்துவிட்டது. அரசு தரப்பில் இருந்தும் இதை ஊக்குவிக்க இப்படியான முயற்சிகளை எடுத்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். விரைவில் அனைத்து விதமான பஸ் டிக்கெட்டுகளும் டிஜிட்டலும் பண பரிவர்த்தனை முறையில் எடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அரசு கொண்டுவர வேண்டும்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations