Advertisement

Responsive Advertisement

அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு


 இந்தியாவில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகின்றது. வருமானம் சற்று குறைந்திருந்தாலும் நிரந்தர வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக உள்ளன.


நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் RD எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் பற்றித் தான். இந்த திட்டமானது மக்களிடையே சேமிப்பினை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொடர் வைப்பு திட்டமாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தங்களால் இயன்ற தொகையினை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் வங்கிகளை போன்றே உள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் முன்னணி வங்கிகளை விட வட்டி விகிதம் அதிகமாகும். அதோடு இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்ய முடியும். அதிக பட்ச தொகை என்று எதுவும் இல்லை.

இந்த திட்டம் மாத சம்பளதாரர்களுக்கும், சாமனிய மக்களுக்கும் ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாகும். ஏனெனில் தங்களுடைய சம்பளத்தில், வருவாயில் சிறு தொகையை இந்த ஆர்டி திட்டத்தில் போட்டு வைக்கலாம். சம்பளதாரர்கள் மட்டும் அல்ல, வீட்டில் உள்ள பெண்கள், குறைந்த வருமானம் ஈட்டும் சாமானிய மக்களும் இதன் மூலம் சேமிக்க முடியும்

இந்த திட்டத்தில் வங்கிகளோடு ஒப்பிடும்போது, வட்டி விகிதம் அதிகம். தற்போது இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் என்பது 5.8% ஆகும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இருவர் இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே தொடங்கிய தனி நபர் அக்கவுண்டினை, ஜாயிண்ட் அக்கவுண்டாக மாற்றலாம். குழந்தைகள் பெயரிலும் பாதுகாவலர் உதவியுடன் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களே இந்த கணக்கினை நிர்வகிக்கலாம்

முதலீடு மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் - 5.8% முதிர்வு காலம் - 5 ஆண்டுகள் மொத்த முதலீடு - ரூ.1,20,000 வட்டி விகிதம் - ரூ.19,395 மொத்த முதிர்வு தொகை - ரூ.1,39,395 ஆக கிடைக்கும். தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க








Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations