Advertisement

Responsive Advertisement

NSC Vs 5 ஆண்டு கால FD-கள்.. எதில் அதிக லாபம் தெரியுமா?


 தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க! | Latest NSC Interest Rate: Is It Higher Than 5-Year FD Rates of SBI, HDFC Bank, and ICICI Bank?

Published: Wed, 10 Jul 2024, 17:45 PM


இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தில் ஒன்றுதான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC). பொதுவாக நிலையான வைப்புத்தொகையை (FD) விட அதிக வருமானத்தை வழங்கும் திட்டமாக NSC உள்ளது. ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு NSC சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இன்றையப் பதிவில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டத்தையும், FD திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்து எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.



NSC திட்டத்தின் விவரங்கள்: இந்த ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான NSC திட்ட வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றாமல் வைத்துள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் தற்போது 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு எந்தவித உச்ச வரம்பும் இல்லை. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். அரசு நடத்தும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.


Savings  Investment  NSC



NSC திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?: HUF-கள், NRI-கள் ஆகியோர் NSC திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. மற்ற இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


முன்னணி வங்கிகள் 5 ஆண்டு FD திட்டங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களையும், NSC திட்டத்தின் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.


NSC திட்டம் தற்போது 7.7% வட்டி வழங்குகிறது.


SBI பேங்க்: பொது வாடிக்கையாளர்களுக்கு 6.60% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி வழங்குகிறது. இது 5 ஆண்டு கால FD திட்டத்திற்கான வட்டி விகிதங்கள்.



HDFC பேங்க்: பொதுக் வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50%, 5 ஆண்டு கால FD திட்டத்திற்கு வழங்குகிறது.


ICICI பேங்க்: பொதுக் வாடிக்கையாளர்களுக்கு 6.90% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.40%, 5 ஆண்டு கால FD திட்டத்திற்கு வழங்குகிறது.



ஆக்சிஸ் பேங்க்: பொது வாடிக்கையாளர்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50%, 5 ஆண்டு கால FD திட்டத்திற்கு வழங்குகிறது.


5 ஆண்டு கால FD திட்டத்தோடு ஒப்பிடுகையில், NSC திட்டம் 7.7 சதவீத வட்டியை 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு வழங்குகிறது. இதிலிருந்து நாம் NSC திட்டத்திற்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations