(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

உங்கள் செல்ல மகளுக்கு.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்? | Sukanya Samriddhi Yojana: SSY Interest Rate Rises to 8.2% for July-Sep 2024. Check Returns on Rs.10K Monthly Investment





Published: Sat, 7 Sep 2024, 10:05 AM


செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) 2015-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு சிறந்த வருமானத்தை SSY திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் SSY திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.


SSY திட்டம் மட்டும் இன்றி பல சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களையும் இந்திய அரசாங்கம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும். அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு SSY திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த விகிதம் நாட்டில் உள்ள பிற சிறுசேமிப்பு திட்டங்களை விட மிக அதிகமான வட்டி விகிதமாகும்.




சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் மாதம்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். ஒரு பெற்றோர் தங்களின் 5 வயது மகளுக்கு சேமிக்கத் தொடங்குகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். 10,000 ரூபாய் முதலீடு செய்தால் வருடத்திற்கு 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.


அப்படியானால் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்யும்போது ரூ.18 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்திருப்பீர்கள். இந்த மொத்த முதலீட்டு காலத்திற்கும் 8.2 சதவீதம் என்ற வட்டி விகிதம் வழங்கப்பட்டால் 37,42



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations