(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ரூ.2000 நோட்டின் நிலைமை என்ன..? ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..!


சென்னை: இந்திய மக்களை 2வது முறையாக அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு அறிவிப்பு என்றால் அது 2000 ரூபாய் நோட்டை பயன்பாட்டில் இருந்து நீக்கியது. முதல் முறை மோடி அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்தது மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியது. இதை கருத்தில் கொண்டு 2000 ரூபாய் நோட்டை பயன்பாட்டில் இருந்து நீக்கிய போது திட்டமிட்டு செயல்பட்டது.


இந்த நிலையில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை பயன்பாட்டில் இருந்து நீக்கிய போது, பல முறை கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ரூ.2000 நோட்டுகள் 97.96% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திங்களன்று தெரிவித்துள்ளது. ரூ.7,261 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.



2023 மே 19 அன்று ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட் 30 அன்று ரூ.7,261 கோடியாக குறைந்துள்ளது என்று RBI தெரிவித்துள்ளது.


2023 அக்டோபர் 7 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/மாற்றுவதற்கும் வசதி இருந்தது. 2023 மே 19 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி இருந்து வருகிறது.


2023 அக்டோபர் 9 முதல், RBI கிளை அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக ரூ.2000 நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் இந்தியா போஸ்ட் மூலம் நாட்டிற்குள் உள்ள எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்தும் ரூ.2000 நோட்டுகளை தங்கள் வங்கி கணக்குகளுக்�





Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations