Advertisement

Responsive Advertisement

மாதம் ரூ.1500 ஓய்வூதியம்.. வங்கிகளுக்கே வரும்.. தமிழக அரசின் செம திட்டம்.. உடனே கிளம்பி போங்க

 

சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கான மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டு உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.


இதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன: 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை. " இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்க! பெண்களுக்கு பொற்காலம்.. வங்கி கணக்கிலேயே பணம்.. ஸ்டாலின் முடிவு " ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ். குடும்ப அட்டை வைத்திருத்தல் வேண்டும்.



குடும்ப உறுப்பினர்களாலோ (அ) வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும். "மகளிர் உரிமை தொகை.. உச்ச நீதிமன்றம் திடீரென கேட்ட சரமாரி கேள்வி.. என்ன நடந்தது? " தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் - மாவட்ட சமூக நல அலுவலர். 

எப்படி பெறுவது: உடனே மாவட்ட சமூக நல அலுவலரை சந்தித்து இதற்கான ஆவணங்களை கொடுத்து வங்கி கணக்கில் மாதம் ரூ. 1500 பெற முடியும். மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்: இது போக மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி தற்போது இந்த திட்டத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.



அரசு, கார்ப்பரேஷன் வேலையில் உள்ள பெண்கள் தவிர, மற்ற எல்லோருக்கும் இந்த பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.. ஆனால் இதற்காக மகளிர் தற்போது புதிதாக யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்ப வேண்டாம். பெண்கள் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.



ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது. 

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.



மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

திட்ட விரிவாக்கம்: இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது. 

மேலும் விரிவாக்கம்: இதை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் கண்டிப்பாக இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations