Advertisement

Responsive Advertisement

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 26,200 புள்ளியை எட்டிய நிஃப்டி!


இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. சென்செக்ஸ், நிஃப்டி பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்யதுள்ளது. நிஃப்டி 26,200 புள்ளிகளில் வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 666.25 அல்லது 0.78% புள்ளிகள் உயர்ந்து 85,836.12 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 181.85 அல்லது 0.81% புள்ளிகள் உயர்ந்து 26,216.05 ஆக வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது. 



சென்செக்ஸ், நிஃப்டி இரண்டு வராற்றில் புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்செக்ஸ் 86,000 புள்ளிகளை நெருங்குகிறது. இன்றைக்கு பம்க்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாவது ஒரு நாளில் நடந்தது இல்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிஃப்டி கடந்த ஓராண்டில் 32 சதவீதம் உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்கார்ப், பாரதி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் 90-150 சதவீதத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

ரீடெயில் முதலீட்டாளர்கள், இந்திய பொருளதார வளர்ச்சியில் நிலைத்தன்மை உள்ளிட்டவைகள் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாக காரணமாக உள்ளது. 



லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

மாருதி சுசூகி,க்ரேசியம், டாடா மோட்டர்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், எம்&எம், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஹிண்டாலோ, நெஸ்லே,அல்ட்ராடெக் சிமெண்ட், ஈச்சர் மோட்டர்ஸ், டாடா கான்ஸ் பராட், பஜாஜ் ஃபினான்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பி.பி.சி.எல்., சன் ஃபார்மா,அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, எஸ்.பி.ஐ., விப்ரோ, எல்.டி.ஐ. ,மைண்ட் ட்ரீ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., இந்தஸ்லேண்ட் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல்.



அதானி எண்டர்பிரைஸ், டைட்டன் கம்பெனி, அப்பல்லோ மருத்துவமனை, பவர்கிரிட் கார்ப், டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, கோடாக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

சிப்ளா, ஓ.என்.ஜி.சி., லார்சன், ஹீரோ மோட்டர்கார்ப், என்.டி.பி.சி., டிவிஸ் லேப்ஸ் அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 83.64 ஆக உள்ளது. இது நேற்றைக்கு 83.60 ஆக இருந்தது.

 


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations