Advertisement

Responsive Advertisement

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? நாலே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்


 சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை உட்பட பல நகரங்களில் தங்கம் விலை ரூ.7000ஐ தாண்டிவிட்ட நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

தங்கம் விலை இப்போது வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.



தங்கம் விலை: ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை மட்டுமே முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள நிலையில், இது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ளதால் தங்கம் வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

கொஞ்சக் காலம் வெயிட் செய்தால் தங்கம் விலை குறையுமா.. அல்லது இதன் மேல் குறைய வாய்ப்பு இல்லையா எனப் பல சந்தேகங்களும் இருக்கிறது. ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளிக்கிறார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "22 கேரட் தங்கம் இந்தியாவில் பல நகரங்களில் ரூ. 7000ஐ தாண்டிவிட்டது. சென்னையிலும் கூட உச்சம் தொட்டுவிட்டது. தங்கத்தை அனைவரும் தைரியமாக வாங்கலாம். நிச்சயம் ஏறப் போகிறது. தங்கம் விலை குறைந்தது 15% அதிகரிக்கப் போகிறது.

சில மாதங்களுக்கு முன்பே தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கியது. அப்போது தான் மத்திய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்தார்கள். இதனால் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இப்போது மீண்டும் உயர்ந்து அதே நிலைக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைத்தது 2 மாதங்கள் கூட தாங்கவில்லை என்பதே உண்மை.

ரூ.7000ஐ தாண்டிவிட்டது: மத்திய அரசு நினைத்தால் இன்னும் 6% வரை இறக்குமதி வரியைக் குறைக்கலாம். அப்படிச் செய்தால் ரூ.100 அல்லது ரூ.200 குறையும். அதுவும் மளமளவென உயர்ந்துவிடும். ஆனால், அதன் பிறகு வரி குறைக்க முடியாது. இப்போது தங்கம் விலை ரூ.7000இல் இருக்கிறது. இத்துடன் நீங்கள் ஜிஎஸ்டி 3% மற்றும் செய்கூலி சேதாரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.அப்போ தங்கம் விலை எங்கு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். தங்கம் மிக மிக வலுவாக இருக்கிறது. விலை குறைய வாய்ப்பு குறைவு. இந்தியாவில் முதல்முறையாகத் தங்கம் விலை ரூ.7000ஐ தாண்டி இருக்கிறது. வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் உயர்ந்துள்ளது.

இறக்குமதி வரி குறைப்பை எல்லாம் மார்கெட்டே சாப்பிட்டுவிட்டது. அந்த இறக்குமதி வரி குறைப்பு இல்லை என்றால் தங்கம் விலை ரூ.7300இல் இருந்து இருக்கும். இதன் பிறகும் தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கவே செய்யும். இதனால் இன்னொரு நல்ல விஷயமும் இருக்கிறது. தங்கம் விலை உயர்வதால் தங்க நகைக் கடன் நிறுவனங்கள் அதிக லோனை தர முடியும்" என்றார்.

காரணம் என்ன: அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் அங்கு வட்டி விகிதத்தை 0.5% குறைத்தது. இதுவே தங்கம் விலை உயரக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். அமெரிக்கா தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இது தவிர இஸ்ரேல் லெபனான் இடையே தாக்குதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த சர்வதேச போர் பதற்றமும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது. இது சாதாரண ஒரு செய்தி மட்டுமே.. இதை நிச்சயமாக ஒரு பொருளாதார ஆலோசனையாகக் கருதக்கூடாது. நிதி முதலீடுகளை மேற்கொள்ளும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கவும்.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations