Advertisement

Responsive Advertisement

Cognizant வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

 


சென்னை: சென்னை காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்று வேலை செய்தால் போதும். மீதமுள்ள 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.


 இந்த பணிக்கான முழுவிபரம் வருமாறு:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் (Cognizant அல்லது Cognizant Technology Solutions Corporation).இந்த நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்ப பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி அசோசியேட் - புராஜெக்ட்ஸ் (Associate - Projects)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 



அசத்தலான சம்பளம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. வேலூரிலேயே பணி இந்த பணி என்பது முன்அனுபவம் கொண்டவர்களுக்கானது. அதன்படி விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் ஆட்டோமேஷன் டெவலப்மென்ட் பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

 ஆட்டோமேஷன் டூல்ஸ் மற்றும் டெக்னாலஜிஸ் உள்ளிட்டவற்றில் டெக்னிக்கல் ரீதியாக நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும். ஆட்டோமேஷன் பணிக்கு தேவையான புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும்.



 பிரச்சனைகளை தீர்க்கும் திறன், டீமாக பணியாற்றும் தன்மை, ஆங்கிலத்தில் நன்றாக பேசுதல், எழுதல் உள்ளிட்ட திறமையை கொண்டிருக்க வேண்டும். இதுதவிர Payer டொமைனில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.

குறிப்பாக Certified Automation Professional (CAP) ISTQB Certified Tester Advanced Level Test Automation Engineer இருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.



 TCS வேவைாய்ப்பு.. சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி இண்டர்வியூ.. யாரெல்லாம் பங்கேற்கலாம்? பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர். காக்னிசண்ட் நிறுவனத்தை பொறுத்தவரை Hybrid முறையிலான பணி நடைமுறையில் உள்ளது. 

இதனால் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியது இருக்காது. வாரம் அதிகபட்சமாக 2 நாட்கள் வரை வீட்டில் இருந்து பணி செய்யலாம். 3 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் முறை முடிவுக்கு வரலாம்.







Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations