Advertisement

Responsive Advertisement

Job Fair : உதகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; 8-ம் வகுப்பு முதல் கலந்துகொள்ளலாம் - தமிழக அரசு ஏற்பாடு!

 


Private ​Companies Job Fair in Ooty ; தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது.



 இதன் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே தங்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்று இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த முறை உதகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலைகளில் இளைஞர்கள் வேலைக்கு சேரும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 20.09.2024 அன்று உதகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


யாரெல்லாம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்?

உதகையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பள்ளி கல்வியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 12- வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். அதே போன்று, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள் மற்றும் ஒட்டுநர்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடைபெறுகிறது?

உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. 20.09.2204 அன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுபவர்களில் தகுதிக்கு ஏற்று தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.



வேலைவாய்ப்பு முகாமிற்கு பதிவு செய்வது எப்படி?

உதகையை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முகாமில் கலந்துகொண்டு வேலையை பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை தேடுபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ தமிழக அரசின் வலைத்தளத்தில் முன் பதிவு செய்த பின்னர் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations