(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

PM கிசான்: 18-வது தவணை பெற.. உங்கள் பெயர் லிஸ்டில் இல்லையா?அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? | How to Check Rejected List of Beneficiary's of PM Kisan Scheme?


Updated: Tue, 3 Sep 2024, 19:52 PM



பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) என்பது நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டு வருமானமாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த 6000 ரூபாய் தொகை 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 என்ற வீதத்தில் 3 தவணைகளாக கொடுக்கப்படுகிறது.


சமீபத்தில் 17-வது தவணை வழங்கப்பட்டது. இந்நிலையில் 18-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிலர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு நிதி உதவி கிடைக்காமல் உள்ளது. இதற்கு அவர்களுடைய விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்பட்டது கூட காரணமாக இருக்கலாம். இந்தப் பதிவில் உங்களுடைய பெயர் PM கிசான் திட்டத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்டுவிட்டதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.


pm kisan  india

தகுதியை மதிப்பாய்வு செய்யவும்: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தகுதியை அரசாங்கம் தற்போது மறுமதிப்பீடு செய்து வருகிறது. உங்களுடைய விவரங்கள் புதுப்பிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருக்கலாம். இதைத் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடலாம்.


இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கவும்: எந்தவித தடையும் இல்லாமல் உதவித்தொகையை பெறுவதற்கு இ-கேஒய்சி செயல்முறையை செய்வது அவசியம். இந்த செயல் முறையை முடிக்காத விவசாயிகளுக்கு தாமதமாகவோ அல்லது தவணைத் தொகை வராமலோ போவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் இன்னும் இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கவில்லை என்றால் உடனடியாக அதை முடிக்கவும்.


சரியாக விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்யுங்கள்: சில நேரங்களில் உங்கள் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் பிழைகள், தவறான வங்கி கணக்கு விவரங்கள் போன்ற விஷயங்கள் நடந்து இருக்கலாம். இதனால் உங்கள் தவணைத் தொகையை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அனைத்து விவரங்களும் துல்லியமானதாகவும் சரியானதாகவும் இருக்கிறதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


பிஎம் கிசான் மாநில வாரியாக நிராகரிக்கப்பட்ட பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்?:


பிஎம் கிசான் திட்டத்தில் நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் விவசாயிகள் தங்கள் பெயர்களை கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தெரிந்துகொள்ளலாம்.


ஸ்டெப் 1: பிஎம் கிசான் திட்டத்தின் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.


ஸ்டெப் 2: ஹோம் பேஜில் "டாஷ்போர்டு" என்பதைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தை நிரப்பவும். அதன் பின் "ஷோ" என்பதைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 4: ஆதார் ஸ்டேட்டஸ் என்பதில் "ரிஜெக்டட்" என்று தேர்வு செய்யுங்கள்.


ஸ்டெப் 5: பிரதமர் கிசான் சம்மன் நிதி நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியல் காண்பிக்கப்படும்.


PM கிசான் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான பொதுவான காரணங்கள்:


விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தல், தவறான IFSC கோடை நிரப்புதல், தவறான வங்கி கணக்கு விவரங்கள், மூடப்பட்ட வங்கி கணக்குகள், செல்லாத வங்கி கணக்குகள் விவசாயிகளின் வயது 18 வயதிற்கு கீழ் இருத்தல், விவசாயிகளின் ஆதார் அட்டை வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்படலாம்.


எனவே உங்களுடைய PM கிசான் திட்ட தொகை வரவில்லை என்றால் அதற்கு மேலே கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தையும் சரி பாருங்கள்!


More From GoodReturns

 PM கிசான் பயனாளர்களே! உதவித்தொகை பெறுவதில் தாமதத்தை தவிர்க்க இந்த 2 விஷயத்தை கண்டிப்பா செஞ்சுடுங்க!

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations