Advertisement

Responsive Advertisement

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி; கல்வித் துறை முக்கிய திட்டம்


 தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி; பதவி உயர்வு மூலம் நிரப்ப திட்டம்

07 Jul 2024 16:23 IST

author-image

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. 



அதன்படி மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது போன்ற அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதற்கு இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசு அறிவிப்பை திரும்பப் பெறவில்லை.



இந்நிலையில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.


”தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் 1,983 பணியிடங்களும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 1,075 பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த 3,058 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒன்றிய அளவில்தான் நடத்தப்படும். மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான நபர்கள் இல்லாதபோது அந்த இடத்துக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் தற்போது திட்டமிட்டு வருகிறோம்’’ என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations