Advertisement

Responsive Advertisement

ATM கார்டு இல்லாமல் கூட இனி ATM-ல் பணம் எடுக்கலாமா? அது எப்படி? இனி டெபிட் கார்டு கட்டாயமில்லை?


 இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லி (Delhi) மற்றும் தமிழ்நாட்டில் (Tamil Nadu) தான் அதிகப்படியான ஏடிஎம் (ATM) மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதிக ஏடிஎம் மையங்களை கொண்ட மாநிலங்களாக டெல்லி மற்றும் தமிழ்நாடு மட்டுமே முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில் அதிகப்படியான ஏடிஎம் இயந்திரங்கள் (ATM machines) நிறுவப்பட்டுள்ளது. இந்திய மக்களின் தேவையை அறிந்து ஒவ்வொரு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுக்க இதுவரை மக்கள் ஏடிஎம் கார்டுகளை (ATM card) பயன்படுத்தி வந்தனர்.



ஆனால், இனி அப்படி டெபிட் கார்டை (Debit card) வைத்து தான், மக்கள் பணம் எடுக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆம், சரியாக தான் படித்தீர்கள். இனி ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்ற எந்தவொரு அட்டையும் இல்லாமல், நீங்கள் ஏடிஎம் மையங்களில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதை ஏடிஎம் கார்டுலெஸ் டிரான்ஸாக்ஷன் (ATM cardless transactions) என்று அழைக்கிறார்கள்.



atm-card-debit-card-less-cash-withdrawal-atm

ATM கார்டு அல்லது டெபிட் கார்டு இல்லாமல் ATM இல் இருந்து பணம் எடுக்கலாமா?


இந்த புதிய ஏடிஎம் கார்டுலெஸ் டிரான்ஸாக்ஷன் முறையை பயன்படுத்தி எப்படி ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு இல்லாமல், ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது என்பதை (how to withdrawal cash without using debit card in atm) பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த புதிய முறையை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க உங்கள் கையில் டெபிட் கார்டு தேவையில்லை என்றாலும், உங்கள் கையில் மொபைல் போன் இருப்பது அவசியம்.



உங்கள் மொபைல் போன் (ATM cash withdrawal using mobile) உதவியுடன், உங்கள் வங்கி கணக்கு இருக்கும் வங்கியினுடைய அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் ஆப்ஸை பயன்படுத்தி, இனி ஏடிஎம் மையங்களில் இருந்து எந்தவொரு கார்டு உதவியும் இல்லாமல் இனி உங்களால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பதை விட, இந்த முறை அதிக பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது.



மொபைல் பேங்கிங் ஆப்ஸ் (Mobile banking apps) இல் பணம் எடுப்பதற்கான பிரத்தியேக குறியீட்டை உருவாக்குவதன் மூலம் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இனி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நேரடியாக மக்கள் பணத்தை வித்ட்ராவ் செய்துகொள்ள முடியும். உங்கள் மொபைல் சாதனத்தில் PIN அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பை (biometric verifivation), கைரேகை போன்றவை பயன்படுத்தி, அங்கீகரித்த பின், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்படும்.


ATM இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க இனி டெபிட் கார்டு கட்டாயமில்லை?

ஏடிஎம் இயந்திரத்தில் எந்தவொரு பிஸிக்கல் அட்டையையும் இனி மக்கள் செருக வேண்டிய அவசியமின்றி பணத்தை எளிமையாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், கார்டு இல்லாமல் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு, பணம் எடுக்கும் செயல்முறையைத் தொடங்க உங்கள் வங்கியின் மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். உங்கள் வித்ட்ராவ் தொகையை உள்ளிட்டு அதற்கான குறியீட்டை பெற்று, அதை ஏடிஎம் உடன் பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.



இந்தியாவில் உள்ள பல ஏடிஎம் இயந்திரங்களில் இப்போது தனிப்பட்ட குறியீடுகள், QR ஸ்கேன்கள் (QR scan) மற்றும் தனிப்பட்ட பின்கள் அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகளை அங்கீகரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது நேரடியாக உங்கள் போன் மூலம், உங்கள் அங்கீகரிப்பிற்கு பிறகு நடப்பதனால், பாதுகாப்பானது. இந்த முறையை பயன்படுத்து ரூ.10,000 வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations